வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருக்காது THE SEED SHALL NOT BE HEIR WITH THE SHUCK லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா அ.ஐ.நா 65-04-29B சகோதரன் டீமாஸ், உங்களுக்கு மிக்க நன்றி. இப்பொழுது நாங்கள் இந்த காலையில் இங்கிருப்பதற்கும், இந்த அருமையான ஜனங்களிடத்திலிருந்து இந்த அருமையான எல்லா சாட்சிகளையும் கேட்பதற்கும் மகிழ்ச்சியடைகிறோம். இப்பொழுது, தேவன் தொடர்ந்து நம்மோடு இருந்து, நம்மை ஆசீர்வதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். 2. இப்பொழுது, இன்றிரவு, கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவு நான் பேச வேண்டும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், சகோதரன் ஷகாரியனிடம் கேட்டேன், நான், "இப்பொழுது, சங்கடமாக உணராதீர்கள். நாங்கள் இங்கிருந்து பதினோரு மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன், நான் இங்கு வரும்போது, எனக்கு-எனக்கு நேரத்தைக் குறித்த உணர்வு போய்விடுகிறது" என்றேன். 3. அது நம்மில் எல்லோருமே அவ்வாறு இருப்பது போல் காணப்படுகிறது. நாம் உணருகிறோம்...அவர்கள், "இரண்டு நிமிடங்கள், மூன்று நிமிடங்கள் அல்லது..." என்கின்றனர். சகோதரன் ஸ்மித், உங்களுக்குத் தெரியும், அதை இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் செய்வது கடினம். அது எப்படியிருக்கிறது என்பதை நான் அறிவேன், ஒவ்வொருவருக்காகவும் நான் வருந்துகிறேன். ஆனால் நாம் எங்கே இருக்கிறோமென்றால், ஒரு கால நேரத்தில் இருக்கிறோம். நாம் நித்தியத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம், ஆனால் நாம் இப்பொழுது சரியான நேரத்தில் இருக்கிறோம். 4. மேலும் நான், "சகோதரன் டீமோஸ், சற்று முன்னர், தர்மசங்கடமாக உணராதீர்கள், அந்த கோட்டை எனக்கு இழுத்துவிடுங்கள், நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதை நான் அறிந்து கொள்வேன்" என்று கூறினேன். இப்பொழுது, நான் முடிக்கவில்லையென்றால், நான் இன்றிரவே முடித்துவிடுவேன். எனவே நான் அவ்வாறு கூறினால், பாருங்கள், இன்றிரவிற்கான ஒரு புதிய பாடப் பொருளை நான் வைத்திருக்கிறேன். 5. இப்பொழுது நாம் புத்தகத்தை திறப்பதற்கு முன்பு, நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நாம் ஆக்கியோனிடத்தில் பேசுவோமாக. 6. அன்புள்ள பரலோகப் பிதாவே, நாங்கள் ஏற்கனவே கேட்டிருக்கிறவைகளுக்காக, இந்தக் காலையில் இந்தக் கூட்டத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, நாங்கள் இப்பொழுது இந்த ஆசீர்வாதத்தை கடந்து செல்ல வேண்டுமானால், இங்கே இருப்பது நன்றாயிருந்தது என்பதை நாங்கள் உணருவோம். எனவே இது உம்முடைய பார்வையில் நல்லதாக இருக்குமானால், நீர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும், தொடர்ந்து எங்களோடு இருந்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது நாங்கள் வார்த்தையின் பேரில் ஒன்று கூடுகிறோம். நாங்கள் ஒருவரோடு ஒருவர் கூடி ஐக்கியங்கொண்டிருக்கையில், நீர் எங்களுக்காக என்ன செய்திருக்கிறீர் என்பதைக் குறித்த சாட்சிகளைக் கேட்டு, இப்பொழுது நாங்கள் வார்த்தைக்கு திரும்பிச் சென்று, இவையனைத்தும் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிவோமாக. அப்படியானால், இன்றைக்கு என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிது என்பதை, நாங்கள் அதைக் காண்கிறோமா மற்றும் உணருகிறோமா என்பதைதைக் குறித்த ஒரு உறுதிப்படுத்துதலாய் அது இருக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தக் காரியங்களை அருளும். ஆமென். 7. இப்பொழுது அவருடைய ஊழியக்காரன் என்ற முறையில் நான்-நான் ஒரு செய்தியைக் கூற கடமைப்பட்டிருக்கிறேன். நான் சில சமயங்களில் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன், கடந்த காலங்களில், ஒருவேளை எப்பொழுதுமே அவ்வாறு இருக்கலாம். ஆனால் நான் சில நேரங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறதில்லை, நான் அவைகளை நேர்மையாயிருக்கும்படி கூறுகிறேன். நான் சரியென்று கருதுவதைக் கூற விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த கருத்தை வெளிப்படுத்த அந்தக் காரியங்களுக்கு ஒரு-ஒரு உரிமையுண்டு. அதனால்தான் நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன். 8. சகோதரன் ஷகாரியன், ஜெப வரிசைகளில் ஜெப அட்டைகளைக் குறித்துப் பேசி, பரிசுத்த ஆவியானவர் என்னவென்று பார்க்கிறார் என்பதையும்...இப்பொழுது, அவர் என்னைக் குறித்து அவ்வாறு கூறவில்லை. அது பரிசுத்த ஆவியைக் குறித்ததாயுள்ளது, ஏனென்றால் என்னால் அந்தக் காரியங்களைச் செய்ய முடியவில்லை. என்னால் செய்ய முடியாது என்பதை, எவரும் அறிவர். ஆனால்-ஆனால் நீங்கள் இங்கே காண்பது என்னவோ, அதுவே சிறிய பக்கமாயுள்ளது. நீங்கள் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும், அவர் எப்படிக் காரியங்களை முன்னறிவிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்! நான்...காரியங்கள் சம்பவிக்கும், அது, இந்த...நீங்கள், அதைச் செய்கிறவர் நீங்கள்தான். நீங்களே தேவனை விசுவாசிக்கிறவராயிருக்கிறீர்கள். 9. மேலும்-மேலும் நீங்கள் தேவனை விசுவாசிக்க வில்லையென்றால், அவர் இங்கே மேடையின் மேல், உங்களிடம் அவ்வண்ணமாக சொல்கிறார் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பாவத்தில் இருந்தால், அவர் அவ்வண்ணமாய் உங்களுக்குக் சொல்கிறார். நீங்கள் செய்திருக்கிறவைகளை, செய்திருக்கக் கூடாது என்று, அவர் உங்களுக்கு அவ்வண்ணமாய்க் சொல்கிறார். அது அவர்கள் ஜெப அட்டையில் என்ன எழுதுகிறார்கள் என்பது மாத்திரமல்ல. அவர்கள் தங்களுடைய ஜெப அட்டையில்...அங்கே, அவர்கள் ஒரு "பாவி," மற்றும் இந்த ஸ்திரீ "தவறான கணவருடன் வாழ்கிறாள்," அல்லது அதுபோன்று அவர்கள் சொல்லமாட்டார்கள். அவர்கள் அதை ஒரு ஜெப அட்டையில் எழுதமாட்டார்கள், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதை எப்படியும் கூறுகிறார், பாருங்கள். பார்த்தீர்களா? அதனால் அது...பிறகு எப்படி...நண்பர்களே, அது இயற்கைக்கு மேம்பட்ட பாகமாகும். 10. நான் இதை கனத்துடன் கூறுகிறேன், ஏனென்றால் இந்தக் காலையில் இங்கே நம்மில் அநேகர் இல்லை, ஒரு சிறு குழுவே உள்ளது. அது என்னை மிகவும் பதட்டமடையச் செய்யுமளவிற்கு, அது என்னை வியப்படையச் செய்கிறது, நான் சில சமயங்களில் கூச்சலிடுவது போன்று உணருகிறேன். நான் மலைப்பகுதியில், ஒரு இடத்தில் அமர்ந்து, அங்கே நான் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்டு, இறங்கிவந்து, அவர் எனக்கு அளித்ததை ஜனங்களுக்கு அளிக்கும்படியாக, அங்கே அதிக நேரத்தை செலவிடுகிறேன். நான்-நான் ஜனங்களிலிருந்து வித்தியாசமாயிருக்க விரும்பவில்லை. ஆனால் அதேசமயத்தில், உண்மையாக இருக்க வேண்டுமென்றால், நான் ஒரு செய்திக்கு, பாருங்கள், தேவனோடு நேர்மையாயிருக்க வேண்டும். 11. இப்பொழுது நாங்கள், கர்த்தருக்குச் சித்தமானால், இன்னும் ஒரு சில நாட்களில், ஒரு வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக, உடனே புறப்படத் தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். அது கர்த்தருக்கு சித்தமானால் நலமாயிருக்கும். நான் நிச்சயமாகவே உங்களுடைய ஜெபங்களை வேண்டுகிறேன். 12. நீங்கள் மிகவும் அருமையானவர்கள்! நான் பேசிக் கொண்டிருக்கையில், நம்மைப் போலவே, நான் முழுவதும் நேரத்தைக் குறித்தே மறந்துவிட்டேன். ஆனால் சகோதரன் ஷகாரியனுக்கும், இங்கே மேடையிலுள்ள இந்த அருமையான ஊழியக்காரர்களுக்கும், அங்கே வெளியேயும், இயேசு கிறிஸ்துவுக்கு நண்பர்களாகிய உங்கள் எல்லோருக்கும், அவருடைய நாமத்தில் நான் உங்களை வாழ்த்துகிறேன்; சிலுவையின் மூலம், தேவனுக்கு, ஒரு-ஒரு சக இனத்தின் இனத்தானாக, சகோதர சகோதரிகளாயிருக்கிறோம். 13. கர்த்தருக்குச் சித்தமானால், இந்தக் காலையில் நான் வேத வாக்கியத்திற்கு, கலாத்தியர் புத்தகத்தைத் திருப்ப விரும்புகிறேன். நான் ஒரு வேதவாக்கியத்தை வாசிக்க விரும்புகிறேன். 14. இப்பொழுது, நேற்றிரவு, இங்கே மேடையிலிருந்த நம்முடைய ஊழியக்கார சகோதரனிடமிருந்து புறப்பட்டுச் சென்ற செய்தியைக் கேட்டோம், அவர் அந்நிய பாஷைகளில் பேசினார். பிரேடெஸன், சகோதரன் பிரேட்ஸன், ஒரு மிக அருமையான மனிதன். நான்... 15. இதை என்னுடைய கல்வியறிவு மற்றும் கல்வியறிவின் மையினாலும், என்னுடைய வார்த்தைகளினால் ஏற்படும் புரிந்துகொள்ளாமையினால் புரிந்து கொள்ளும்படிக்கு, செய்தி உண்மையென்று அறிந்து, அன்றொரு இரவு அந்த குழுவில் இருந்தவர்களும், அந்த அறிவாற்றல் கொண்ட மாதிரியை சந்திக்கக் கூடியவர்களும்...அங்கே நின்று கொண்டிருந்தனர். கர்த்தர் என்னை செய்யும்படி அழைத்திருக்கிறதை அவர்களால் செய்ய முடியாதிருக்கலாம். கர்த்தர் அவர்களை செய்யும்படி அழைத்திருக்கிறதை என்னால் செய்ய முடியாது. ஆனால் நாம் ஒன்று சேர்ந்து கிரியை செய்கிறோம், நாம் தேவனுக்கு முன்பாக தரித்திருந்தால், நம்மால் செய்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். 16. நேற்றிரவு அவர் இங்கே ஒரு-ஒரு சாட்சியைக் கொடுத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாஷைகளில் பேசினார், மேலும், கூட்டத்தில் வெளியே யாரோ ஒருவர், நான் அதை எப்பொழுதும் பயபக்தியோடு அறிந்திருக்கிறேன். காரணம், தேவனுடைய ஆவியானவர் நமக்கு ஏதோ ஒரு காரியத்தைக் கொண்டு வருகிறார் என்பதை, வேதத்தின் மூலம், நான் புரிந்துகொள்கிறேன். அவர் பின்மாரி, முன்மாரி, பின்மாரியைக் குறித்துப் பேசினார். அது என்னை ஒரு சிந்தனைக்கு கொண்டு வருகிறது. 17. அந்த சகோதரன் பான்ஹாம் என்னிடம் சில காசோலைகளைக் கொண்ட ஒரு சிறு பொதியைக் கொடுத்துவிட்டு, "இது ஜனங்களிடத்தில் இருந்து பெற்ற...ஒரு அன்பின் காணிக்கை" என்றார். இப்பொழுது, அவர்-அவர், அவர்கள் அதை செய்திருக்கக் கூடாது. பாருங்கள், நான் அந்த நோக்கத்திற்காக இங்கு வரவில்லை. ஆனால் நான்...அவர், அவர்கள் அதை என்னிடத்தில் கொடுத்தனர், மேலும், நிச்சயமாகவே...அதைத் திரும்பக் கொடுப்பதற்கு வழியே இல்லை. கர்த்தருக்குச் சித்தமானால், நான் அதை எடுத்துக்கொண்டு, வெளிநாடுகளுக்குச் செல்லுகிற, என்னுடைய செலவுகளின் பேரில் அதை செலவு செய்ய முயற்சிப்பேன். ஏனென்றால், நான் எங்கு போய்க் கொண்டிருக்கிறேன் என்பதற்கு, எந்த வழியிலும், எனக்கு நிதி உதவி அளிக்கப்படவில்லை. 18. அது ஒருவிதமான இரகசியம், ஏனென்றால் சபைகள் என்னை உள்ளே அனுமதிக்காது. நான் ஒரு வேட்டைக்காரனாக உள்ளே செல்லப் போகிறேன், ஏனென்றால் அது என்னுடைய கர்த்தர் பேரில் உள்ளது. கர்த்தர் அதைச் செய்யும்படி அதை என் இருதயத்தில் வைத்திருக்கிறார், மேலும் நான் ஒரு விதமான மாறுவேடத்தில் செல்ல வேண்டியதாயுள்ளது. பார்த்தீர்களா? எனவே அவர்கள் ஒவ்வொருவரும் நான் ஒரு அட்டையில் கையொப்பமிட வேண்டும் என்ற ஒரு சிறு வினோதமான கருத்துக்களை அங்கே வைத்துள்ளனர், அவர்கள் என்ன விசுவாசிக்கிறார்கள் என்பதன் பேரில் நான் அவர்களோடு ஒத்துப்போய், இந்த மற்ற குழுவினர் தவறென்றும் கூறுவேன் என்றும், இந்தக் குழு தவறு என்று நான் கூறினால், அவர்கள் என்னை உள்ளே கொண்டு வருவார்கள் என்று இந்தக் குழு கூறுகிறது. பார்த்தீர்களா? ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. பாருங்கள், நாம்... 19. நான் எப்பொழுதுமே எப்பொழுதும் ஜனங்களுக்கு இடையேயும், ஸ்தாபனங்களுக்கும் மற்றும் அவர்களுடைய வேறுபாடுகளுக்கும் வெளியேயும், நிற்க முயற்சித்துள்ளேன், தேவனுடைய ஆவியானவர் இந்தக் காலையில் இங்குள்ள சகோதரர்கள் மூலமாக கூறிக் கொண்டிருந்தது போலவே தோன்றியதை, அதாவது நாம் ஒரு ஸ்தாபனம் அல்ல என்று அழைக்கிறேன். நாம் ஒரு குடும்பத்தின் பிள்ளைகளாயிருக்கிறோம். இப்பொழுது, அங்கே பிரான்ஹாம் ஸ்தாபனம் இல்லை. ஒரு பிரான்ஹாம் குடும்பம் உண்டு, நாங்கள் எல்லோரும் அந்தக் குடும்பத்தில் சேரவில்லை, நாங்கள் அந்தக் குடும்பத்தில் பிறந்திருக்கிறோம். எனவே, அது எப்படி என்று எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த முறையில், நான், அதைத்தான் நான் பிரதிநிதித்துவப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். 20. இப்பொழுது கலாத்தியர் 4:27-31-ல் உள்ள வசனங்களை நான் இங்கு குறித்து வைத்துள்ளேன் என்று நான் நினைக்கிறேன், நான் இதை ஒரு பொருளுக்காக வாசிக்க விரும்புகிறேன். அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்ப வேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப் பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது. சகோதரரே நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளி யாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது. கர்த்தர் தம்முடைய விலையேறப்பெற்ற வார்த்தையோடு இப்பொழுது அவருடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. 21. நான் நேற்றிரவு, ஒரு சில காரியங்களைக் குறித்துக் கொண்டேன். அது எங்காவது, வழக்கமாக வாரத்திற்கு ஒரு கூட்டம் நடத்தும் போது, என்னால்-என்னால் அந்த வேத வாக்கியங்களை என் மனதில் தெளிவாக நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இப்பொழுது நான்...இப்பொழுது, நான் ஒரு சிறு வேடிக்கையான வழியில் கூறுகிறேன், நான் இங்கே இந்த மேடையில் கேலியாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று பொருட்படுத்திக் கூறவில்லை. ஆனால் இருபத்தைந்து வயதைக் கடந்த பிறகு, இரண்டாம் முறை, எனக்கு முன்பிருந்தது போல எனக்கு ஞாபகமில்லை. அங்கே நிறைய...இந்த பழைய ஃபோர்ட் கார் நிறைய மைல்கள் ஓடியிருந்தன, எனவே எனக்கு அது நினைவில் இல்லை. ஆனால் என்னால் அசைய முடிந்த வரையில், ஒவ்வொரு அசைவையும் என்னை இரட்சித்த அவருடைய மகிமைக்கென்று கொடுக்க விரும்புகிறேன். 22. இப்பொழுது நான், இன்று காலையில் பார்த்து கவனிக்கிறேன்...இது ஒரு வேளை விநோதமாகத் தென்படலாம், ஒரு வேளை அறிவாற்றல் கொண்ட சிந்தைக்கு இது முற்றிலும் குழப்பமாயிருக்கலாம், ஆனால் அது நான் அழைக்கப்பட்டிருக்கிற காரியத்திற்கு பாராட்டுக்குரியதாய் இருக்கிறது. ஒவ்வொரு சிறு காரியமும் கூட எனக்கு ஒரு அடையாளமாய் உள்ளது. நான் அதை கவனிக்கிறேன், அது எப்படி அசைகிறது என்று பார்க்கிறேன். அவ்விதமாகவே நான் சில சமயங்களில் என்னுடைய செய்தியைப் பெற்றுக்கொள்கிறேன், ஆவியானவர் அசையும் விதத்தைப் பார்த்துப் கவனிக்க வேண்டும், இந்த ஒன்று என்ன கூறுகிறது என்றும், அந்த ஒன்று என்ன கூறுகிறது என்றும் பார்க்க வேண்டும். 23. ஒரு சுகமளிக்கும் ஆராதனைக்கு முன்பாக, அநேக முறைகள், என்னை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள், அங்கே மேடையின் மேல் நின்றுகொண்டு அல்லது பின்னால் அமர்ந்து, கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள்; நான் ஆவியை, அது அசைவாடிக் கொண்டிருக்கிற விதத்தை உணர்ந்து கொண்டிருக்கிறேன், அங்கே அமர்ந்துள்ள நபரோடுள்ள காரியம் என்னவென்பதை நான் ஏற்கனவே அறிவேன். பார்த்தீர்களா? அதை அங்கே பார்க்கிறீர்கள், இங்கே பார்க்கிறீர்கள், பாருங்கள், நீங்கள் மேடைக்கு செல்வதற்கு முன்பே, நீங்கள் அதை புரிந்துகொள்கிறீர்கள். 24. சில சமயங்களில் நான் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு, சில சமயங்களில், இங்கே கலிபோர்னியாவிற்கு வருவதற்கு முன்பு, நான் என்னோடு இருப்பவர்களோடு அமர்ந்து, "ஒரு குறிப்பிட்ட காரியம் சம்பவிக்கும், இது இங்கே சம்பவிக்கும், இது இங்கே சம்பவிக்கும், அது இந்த வழியாய் கடந்து செல்லும்," என்று கூறுகிறேன், பாருங்கள், ஏனென்றால் அது தேவனுடைய ஆவியில் உள்ளது. அவர்...ஆதி முதல் எல்லாவற்றையும் அறிந்திருந்தார், பாருங்கள், எனவே அவர் நித்தியமானவராயிருக்கிறார். 25. அதன்பின்னர் கவனியுங்கள், இந்தக் காலையில், சகோதரன் ஜூவல் ரோஸ், நம் எல்லோருக்கும் மிகவும் விலையேறப்பெற்ற நண்பரும் சகோதரனுமாயிருக்கிறார், எப்படியாய் அவர் எழுந்து அந்த சங்கீதங்களை வாசித்தார். "உங்களில் எந்த விதமான ஒரு வித்து தரித்திருக்கிறது என்பதை நான் காண விரும்புகிறேன்" என்று அவர் கூறினது போன்றே அது எப்படி பொருந்துகிறது என்று பாருங்கள். நேற்றிரவு, ஆவியானவர் பேசி, "பின்மாரியும், முன்மாரி, பின்மாரியும், கடைசி நாட்களில் இரண்டுமே பெய்துகொண்டிருந்தன" என்பதைக் குறித்து கூறினார். இந்தக் காலையில், "உன் மேல் தரித்திருக்கிற வித்து." பாருங்கள், ஆவியானவர் பேசுகிறார், அது எப்படி இந்த ஊழியக்காரர் களினூடாக, இந்த காலையில் கூறப்பட்டது என்பதைக் கவனியுங்கள். ஆகையால் நான் இந்த பொருளை எடுத்துக் கொள்கிறேன்: வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருக்காது. 26. அது மிகவும் விநோதமான ஒரு பாடமாயுள்ளது, ஆனால், வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருக்காது. இதைக் குறித்து நான் எடுத்த முடிவுகளிலிருந்து, இல்லை, என்னுடைய பாடப் பொருளில், சரியாகக் கூறினால், கலாத்தியர் 4:27-லிருந்து, மூன்று, பவுல் இங்கே உண்மையாகவே ஆபிரகாமின் இரண்டு குமாரர்களின் சந்ததியைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான். இப்பொழுது, இதை, நீங்கள் நிச்சயமாக தவறவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதை உபயோகிக்க விரும்புகிறேன். எனக்கு நேரம் கடந்துவிட்டால், இன்றிரவு நான் அதை எடுத்துக் கொள்வேன். ஒரு ஞாயிறு பள்ளி பாடத்தைப் போன்று, நான் கற்பிக்க விரும்புகிறேன், அப்பொழுது நீங்கள் ஒரு மேலான புரிந்துகொள்ளுதலை உடையவர் களாயிருப்பீர்கள் என்று, நான் நினைக்கிறேன். 27. மேலும் நான்...மேலும் என்னைக் காட்டிலும் இதை திறமையாக பிரசங்கிக்கக் கூடிய வல்லமையுள்ள சில மனிதர்களே, ஏன்...நான் எந்த வகையிலும் ஒரு வேதபண்டிதன் அல்ல. எனவே இதன் பேரில் நீங்கள் என்னுடன் உடன்படவில்லையென்றால், நேற்றிரவு இங்குள்ள ஒரு அருமையான சகோதரி எனக்கு ஒரு செர்ரி பை பழ பணியாரத்தை தயாரித்து தந்தபோது, நான் அதை செய்தது போன்றே உணருகிறேன். என்னுடைய-என்னுடைய...இன்று காலை என்னுடைய உணவக விடுதி அறையில் உட்கார்ந்து கொண்டு, நான்-நான் ஒரு விதையை கடிக்க நேர்ந்தாலும், நான் இன்னமும் பழ பணியாரத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் பாருங்கள், நான் விதையை வெளியே எடுத்து வைத்துவிட்டேன். ஆகையால், அதைக் குறித்து நீங்கள் எதையாவது விசுவாசிக்கவில்லையென்றால், அப்படியே ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, பாருங்கள், நீங்கள் சரியென்று நினைப்பதை அப்படியே தொடர்ந்து புசியுங்கள். 28. இப்பொழுது, பவுல் ஆபிரகாமின் இரண்டு குமாரர்களைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான், அவர்களில் ஒருவன் சாராள் மூலமும், மற்றவன் ஆகார் மூலமும் பிறந்தவன். இப்பொழுது நாம் இங்கே கண்டறிகிறோம், தேவன் இரண்டு என்ற எண்ணில் ஒருபோதும் சுட்டிக்காட்டப்படுகிறதில்லை என்பதை நாம் வேதவாக்கியங் களினூடாக புரிந்து கொள்கிறோம். அது மூன்றில் உள்ளது. எப்பொழுதுமே மூன்றில், தேவன் பூரணப்படுத்தப் பட்டிருக்கிறார். 29. வேதாகமத்தின் கணிதம் பரிபூரணமாக இயங்குகிறது. தேவன் மூன்றில் பூரணப்பட்டு, ஏழுகளில் பரிபூரணப்படுத்தப்படுகிறார். பாருங்கள், எனவே வேதாகமத்தின் கணிதம் ஒருபோதும் தவறிப் போவதில்லை என்பதை நாம்-நாம் கண்டறிகிறோம். 30. நமக்கு இங்கே ஆபிரகாமின் இரண்டு குமாரர் உள்ளனர், நாம் அந்த குமாரர்களில் ஒருவராக, அல்லது ஆபிரகாமின் குமாரனாக இருக்கும் வரையில் மட்டுமே நாம் சுதந்தரவாளிகளாக இருக்க முடியும். "நாம் கிறிஸ்துவுக்குள்ளாக மரித்து, அதன் பின்னர் ஆபிரகாமின் வித்துக்களாகி, வாக்குத்தத்தத்தின்படியே அவரோடு சுதந்தரவாளிகளாயிருக்கிறோம்," ஆகையால் ஆபிரகாம் மற்றொரு குமாரனைப் பெற்றாக வேண்டும். 31. இப்பொழுது, அவனுடைய முதல் குமாரன் ஆகாரின் மூலம் பிறந்தான் என்பதை நாம் அறிவோம். அவனுடைய இரண்டாவது குமாரன் சாராளின் மூலம் பிறந்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். ஆனால் அவனுக்கு ஒரு மூன்றாம் குமாரன் இருந்தார், அது இயேசுவாக இருந்தது. இப்பொழுது, அது விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் அதைத்தான் நாம் விளக்க முயற்சிக்கப் போகிறோம். நான் கூறினதுபோல, தேவன் தம்மை, எப்பொழுதும் பூரணத்தில், மூன்றில் சுட்டிக்காட்டுகிறார். நான் இப்போது எல்லாருக்கும் முன்பாகவும், விசேஷமாக நம்முடைய இறையியலாளர்களுக்கும் என்னைத் தெளிவுபடுத்தியுள்ளேன், இந்தக் காரியங்கள் நான் அதைக் காணும் விதமாகவே உள்ளன என்றும், அது எனக்கு வரும் விதமாகவே உள்ளன என்றும் நான் நம்புகிறேன். 32. ஆதியில், தேவன், தேவன் மாத்திரமே வாசம்பண்ணினார், ஏனெனில் அவர் நித்தியமானவராக இருந்தார், பாருங்கள், தேவனாய் கூட இருக்கவில்லை. தேவன் ஒரு "ஆராதனைக்குரிய பொருளாய்" இருக்கிறார். லோகாஸ், நாம் அதை அழைக்கிறபடி, தேவனிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை, அது, கர்த்தருடைய தூதன் அல்லது கர்த்தருடைய வார்த்தை என்று எவருக்கும் தெரியும், இஸ்ரவேலரை வனாந்திரத்தினூடாகப் பின்தொடர்ந்தவர்; உடன்படிக்கையின் தூதன், தேவனிடத்திலிருந்து சென்ற லோகாஸ். அதன்பின்னர் அந்த லோகாஸ் மாம்சமாகி நமக்கு மத்தியில் வாசம்பண்ணினார். இப்பொழுது நாம் பரிசுத்த யோவான் 1-ல் இருக்கிறோம், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." இப்பொழுது, அவர் தம்முடைய ஜீவனை நமக்காக அளித்தபோது, அப்பொழுது அவருடைய ஆவி நம்மேல் திரும்ப வருகிறது. இயேசு, "நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே அறிவீர்கள்; நான் உங்களுக்குள்ளும், நீங்கள் எனக்குள்ளும் இருக்கிறீர்கள்." 33. பாருங்கள், அது தேவன், எல்லா நேரத்திலும், பல்வேறுபட்ட காலங்களினூடாக தேவன் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, தம் மூலமே கிரியை செய்துகொண்டிருக்கிறார். எனவே அந்த மூன்று, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியான, ஒரே தேவன் மூன்று தன்மைகளில் கிரியை செய்கிறார். நாம் இன்றைக்கு ஒன்றாயிருக்கிறோம், சபை தாமே, ஒரு-ஒரு சபையை உண்டாக்குவதற்கு, உலகத் தோற்றத்திற்கு முன்னர் தேவனுடைய சிந்தையின் ஒரு தன்மை. ஆகையால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் ஆதியிலே கிறிஸ்துவுக்குள் இருந்தனர், அதுவே அவருடைய சிந்தனைகளாயிருந்தன, அவருடைய சிந்தனைகள் அவருடைய தன்மைகளாயிருக்கின்றன. 34. இங்கே வித்து, வாக்குத்தத்தத்தில் துவங்குகிறது. இங்கே ஆபிரகாம் இஸ்மவேலினால், சற்று சந்தேகப்பட்டான். நாம் பேசப்போகும் இந்த வித்தின், மூன்று நிலைகளை நான் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன், அது பதருடன் சுதந்தரவாளியாயில்லை. இப்பொழுது இங்கே துவக்கத்தில், தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தை அளித்தார் என்பதை, நாம் கண்டறிகிறோம். 35. அவர் முதலில் ஆதாமுக்கு வாக்குத்தத்தத்தை அளித்தார். அது, இல்லை, நிபந்தனைகளின் பேரிலான உடன்படிக்கையாயிருந்தது. "நீங்கள் இதைச் செய்யவில்லையென்றால். நீங்கள் இதைச் செய்வீர்களானால் நலமாயிருக்கும்" என்றார். 36. ஆனால் அவர் அதை ஆபிரகாமுக்கு அளித்தபோது, அது நிபந்தனையற்றதாயிருந்தது, "நான் அதை ஏற்கனவே செய்திருக்கிறேன்." அவர் ஒருபோதும்...அவர் என்ன செய்தார், அது நிபந்தனையற்றதாயிருந்தது, அவர் ஆபிரகாமுக்கு அளித்தார். இப்பொழுது, அதன் மூலமாக, ஆபிரகாம் வாக்குத்தத்தத்தை உடையவனாயிருக்கிறான், ஆகையால் நாம் ஆபிரகாமின் வித்தாயிருக்க வேண்டும். "அது ஆபிரகாமுக்கு மாத்திரமல்ல, அவனுக்குப் பின் வந்த அவனுடைய சந்ததிக்கும் உரியதாயிருந்தது." இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், அது அவனுக்குப் பிறகு "சந்ததிகள்" அல்ல, ஆனால் அவனுக்குப் பிறகு "சந்ததி." 37. இப்பொழுது வாக்குத்தத்தம், சாரளால் சற்று சந்தேகிக்கப்பட்டது என்பதை நாம் கண்டறிகிறோம், சாராள் ஆபிரகாமிடம் இந்த எகிப்திய, ஆகார் என்னும், வாலிபப் பெண்ணை, மனைவியாக, விவாகம் செய்து கொள்ளும்படியும், அந்தவிதமாகத்தான் தேவன் இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததியை எழுப்புவார் என்றும் கூறினாள். 38. இப்பொழுது, நீங்கள் பாருங்கள், நான் நேற்றிரவு கூறினதுபோல, அந்த மூல தேவனுடைய திட்டத்திலிருந்து எந்த அசைவும் அந்த முழு காரியத்தையும் தூக்கியெறிந்துவிடும். நாம் அந்த மூல வார்த்தையிலிருந்து விலக முடியாது. அது...நாம் நேற்று மாலை, அல்லது அதற்கு முந்தின மாலை, சரியாகக் கூறினால் பிலேயாமின் பேரில் பேசினோம். அவன், "போகாதே!" என்ற தேவனுடைய பதிலை நேரடியாகவும், தெளிவாகவும், பெற்றான். ஆனால் அவர் அனுமதிக்கும் ஒரு சித்தத்தை உடையவராயிருக்கிறார். நீங்கள் விரும்பினால் நீங்கள் அதில் கிரியை செய்யலாம், தேவன் அது அவரைக் கனப்படுத்தச் செய்வார், ஆனால் இன்னமும் அது தேவனுடைய பரிபூரண சித்தமல்ல. அதற்காகத்தான் நாம் பாடுபட வேண்டும், அவருடைய பரிபூரண சித்தத்திற்காகவே, அவருடைய அனுமதிக்கும் சித்தத்திற்காக அல்ல. அவர் இன்றைக்கு பூமியில் இருக்கிற தேவனுடைய இராஜ்ஜியம்...ஒரு அனுமதிக்கப்பட்ட சித்தத்தின் பேரில், ஒருபோதும்...நீதியாக நிறுவப்பட முடியாது. அது அவருடைய பரிபூரண சித்தத்திற்கு திரும்ப வரவேண்டும். 39. இப்பொழுது சாராள், சாராளின் மூலமாக குழந்தை பிறக்கும் என்று தேவன் ஆபிரகாமிடம் கூறியிருந்ததை நாம் இங்கே காண்கிறோம், அது உலகத்தை ஆசீர்வதிக்கும், இப்பொழுது சாராள் அதை சந்தேகப்பட்டாள். அது ஆபிரகாமினால் ஒருபோதும் வரவில்லை என்பதை, நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஆனால் ஸ்திரீயான, சாராள் மூலமாகத்தான். அவள் அதை சந்தேகித்து, அவள், "ஆகாரைக் மணந்து கொள்" என்றாள்." ஆபிரகாம் அதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் தேவன் அவனிடம் சென்று அதை எப்படியும் செய்யும்படி கூறினார். எனவே அவன் சற்று சந்தேகப்பட்டு, அதைச் செய்தான். இப்பொழுது, ஈசாக்கு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஸ்திரீயிலிருந்து சுயாதீனமாய் இருக்கிறபடியால், சந்தேகத்தில் உள்ள, அடிமைப் பெண்ணாகிய இஸ்மவேலுடன் சுதந்தரவாளியாக இருக்க முடியாது. 40. அதைத்தான் பவுல் இங்கே கூற முயற்சித்துக் கொண்டிருந்தான். பாருங்கள், சந்தேகப்படுகிற ஒரு காரியம் எங்கே உள்ளதோ, அது ஒரு குறிப்பிட்ட தேவனுடைய காரியத்தை, ஒரு குறிப்பிட்ட தேவனுடைய ஒழுங்குமுறையை வீழ்த்துகிறது, ஆனால் அது தேவனுடைய மூல ஒழுங்கின்படி சுதந்தரவாளியாயிருக்கமாட்டாது. உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள், அது சுதந்தரவாயிருக்க முடியாது. 41. இப்பொழுது அதனால்தான் நான் இன்றைக்கு இதை மிகவும் வலியுறுத்துகிறேன். இது ஒரு நல்ல நேரமாயிருக்கும் என்று நான் நினைத்தேன், ஏனென்றால் நாம் இன்னும் எவ்வளவு காலம் ஒன்றாக இருப்போம் என்று எனக்குத் தெரியாது, மேலும், ஒருவேளை என்னால் முடிந்தால், நான் ஸ்தாபிக்கப்பட்ட மார்க்கத்தை மிகவும் உறுதியாக கண்டனம் செய்கிற காரணத்தை உங்களுக்கு காண்பிக்க தேவன் எனக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்வாராக. பார்த்தீர்களா? பாருங்கள், அது தேவனுடைய மூல திட்டத்துடன் சுதந்தரவாயிருக்க முடியாது, ஏனென்றால் ஸ்தாபனம் தேவனுடையதல்ல. அது மனிதனால் உண்டானது. ரோமாபுரியிலுள்ள, நிசாயாவில் இருந்த ரோமன் கத்தோலிக்க சபைதான், உலகிலேயே, முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்டது. வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரம், "அவள் ஒரு வேசி, அவளுடைய பிள்ளைகள் யாவரும் வேசிகள்" என்று கூறியுள்ளது. ஒரு வேசி தன் கணவனுக்கு உண்மையாக வாழாத ஒரு ஸ்திரீயாயிருக்கிறாள், ஒரு வேசியும் அதே காரியம்தான். ஆனால், நீங்கள் பாருங்கள், அது எப்படியோ, ஒரு சபையாக மாறியது. அது ஒரு ஸ்தாபன முறைமை மற்றும் அது சகோதரத்துவத்தை பிரிக்கிறது. நாம் எல்லா சபைகளையும் ஒன்றாக ஸ்தாபிக்க முயற்சித்தோம். அது கிரியை செய்யாது; ஒருபோதும் கிரியை செய்யவில்லை. அது ஒருபோதும் கிரியை செய்யாது. உலக சபைகளின் ஆலோசனை சங்கம், அவர்கள்...அவர்கள் தேவனுடைய திட்டத்திற்கு புறம்பாக இருக்கிறார்கள். 42. இப்பொழுது நீங்கள், "இலக்கணப் பள்ளிக் கல்வி கூட இல்லாத ஒரு நபரான, நீர் யார்?" என்று கேட்கலாம். கல்வி என்னவாயிருந்தாலும் அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிறதில்லை. நான் பேச முயற்சித்துக் கொண்டிருப்பது என்னுடைய கல்வியறிவைக் குறித்து அல்ல. 43. நான் பேசிக்கொண்டிருப்பது தேவனுடைய வார்த்தையைக் குறித்து தான், பாருங்கள். ஊழியத்தில் நீங்கள் காணும் இந்த ரூபகாரப்படுத்துதல்கள், அது நானல்ல, அது சத்தியமாயுள்ளது என்பதையும், அதை உங்களுக்கு புரிந்து கொள்ளும்படி செய்யவும் தேவன் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பொய்யோடு தேவனுக்கு ஏதாவது தொடர்பு இருக்குமா? அப்பொழுது ஒரு பொய்யை ஆசீர்வதிக்கும் ஒரு தேவனுக்கு ஊழியம் செய்வது எனக்கு தூரமாய் இருப்பதாக. அவர் ஆசீர்வதிக்கும் சத்தியத்தை, அவர் கனப்படுத்திய சத்தியத்தையே அது ஆசீர்வதிக்கிறது. 44. இப்பொழுது, இஸ்மவேல் ஈசாக்கோடு சுதந்தரவாளியாக இருக்க முடியாது, ஏனென்றால் ஒருவள் சற்று சந்தேகப்பட்டாள், சற்று சந்தேகப்பட்டாள். அது ஒரு குழந்தையாயிருந்தது, அது இன்னமும் ஆபிரகாமின் சந்ததியாயிருந்தது, ஆனால் அது தேவனுடைய பரிபூரண வழி அல்ல: இஸ்மவேல். இப்பொழுது நான் இங்கு அதிக நேரத்தை செலவிட முடியும், ஆனால் அது இருக்க வேண்டிய உண்மையான விதத்தில் பரிசுத்த ஆவியானவர் இதை உங்களுக்குத் தெரியப்படுத்துவார் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். 45. இப்பொழுது அவர்கள், இஸ்மவேலும் ஈசாக்கும் ஒன்று சேர்ந்து சுதந்தரவாளிகளாயிருக்க முடியாது ஏனென்றால் தேவனுடைய மூலத் திட்டம் தேவனுடைய அனுமதிக்கக் கூடிய ஒரு-ஒரு திட்டத்திற்குப் பதிலாக மாற்றீடு செய்யப்பட்டது, ஒரு அனுமதிக்கப்பட்ட வழியை தேவன் ஆசீர்வதித்தார், இன்றைக்கு ஆவிக்குரிய சபையானது ஸ்தாபனத்தோடு சுதந்தரவாளியாக இருக்க முடியாது. தேவன் இஸ்மவேலை ஆசீர்வதித்தது போல, ஸ்தாபனங்களை, தேவன் அவைகளை ஆசீர்வதித்தார். ஆனால் ஆவிக்குரியப் பிரகாரமானவர்கள் மற்றவர்களோடு சுதந்தரவாளியாயிருக்க முடியாது. அது உண்மை. சபை ஸ்தாபனத்திலிருந்து (சபை என்று அழைக்கப்படும், சபை மாம்சப்பிரகாரமானது), தெரிந்து கொள்ளப்பட்ட, கிறிஸ்துவின் மணவாட்டி வெளியே வருவாள். 46. இப்பொழுது, இந்த வேளையில் என்னைத் தொல்லைப் படுத்துவது என்னவென்றால், நாம் இந்த எல்லா ஸ்தாபனங்களையும் காண்கிறோம் என்பதை அறிவதேயாகும். நமக்குத் தெரிந்ததை இதில் இழுப்பது...பின்மாரி, அல்லது, ஆவியின் பொழிவு என்று நீங்கள் அழைக்கிறீர்கள். "அது நிறைவேறும்போது, அது முடிவாகும்" என்று இயேசு கூறினார் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? புத்தியில்லாத கன்னிகைகளும், புத்தியுள்ள கன்னிகைகளும் ஒன்று சேர்ந்து சுதந்தரவாளிகளாய் இருக்கவில்லை. ஏனென்றால்...புத்தியில்லாத கன்னிகையோ, எண்ணெய் குறைவுள்ள, ஒரு கன்னிப் பெண்ணாயிருந்தாள். ஆனால் அவள் எண்ணெய் வாங்க வந்தபோது, அந்த நேரத்தில் மணவாளன் வந்தார். அவள் எண்ணெய் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கையில், அவள் கைவிடப்பட்டாள். உங்களுக்குப் புரிகிறதா? அது உண்மையாகவே, நன்றாய் பதிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, நிச்சயமாகவே நான் அந்தப் பாடப்பொருளை இதற்கு மேல் பேச வேண்டியதில்லை. இப்பொழுது, ஆவிக்குரிய பிரகாரமானவர்களும் மாம்சப் பிரகாரமானவர்களும் ஒன்று சேர்ந்து சுதந்தரவாளிகளாயிருக்க முடியாது. 47. அதனால்தான் எடுத்துக் கொள்ளப்படுதல், மணவாட்டி, புத்தியுள்ள கன்னிகை, அழைக்கப்பட்ட, முன்குறிக்கப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்டவளுக்கே! ஏன், வர்த்தக புருஷராகிய நீங்கள், தேவன் தம்முடைய திட்டத்தை தற்செயலாக இயக்குகிறார் என்று சிலர் நினைக்க முயற்சிப்பது போல உங்களுடைய உத்தியோகத்தை நடத்தமாட்டீர்கள். உலகத் தோற்றத்திற்கு முன்னரே, யார் இரட்சிக்கப்படுவார்கள் மற்றும் யார் இரட்சிக்கப்படமாட்டார்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார். முன்குறித்தலின் மூலம், முன்னறிவினால், அவர் ஒவ்வொரு அங்கத்தினரின் பெயரையும், சபை துவங்குவதற்கு முன்னமே, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதினார். அந்த புஸ்தகத்திலுள்ளதைத் தேடி இரட்சிக்கவே இயேசு வந்தார். அவர் மீட்பின் புஸ்தகத்தை வாங்கினார். அது இழக்கப் பட்டுவிட்டது, அவர் நம்மை மீட்டார், அவர் நம்மை மீட்டபோது அந்த புத்தகத்திலுள்ள எல்லா நாமங்களும் மீட்கப்பட்டன. 48. அப்படியானால், நான் அநேக முறை கூறியுள்ளது போல, நீங்கள் அதை அடையாளம் கண்டு கொள்கிறீர்கள். அந்தக் காரணத்தினால் தான் நீங்கள் இந்தக் காலையில் இங்கே இருக்கிறீர்கள், ஏன் நீங்கள் இந்த எல்லா ஸ்தாபனங்களிலிருந்தும் மற்ற காரியங்களிலிருந்தும் வெளியே வந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள்...ஏதோ ஒன்று உங்களை இழுத்துக் கொண்டிருக்கிறது. கோழியின் கீழ் குஞ்சு பொறிக்கப்பட்ட கழுகைக் குறித்த என்னுடைய சிறு சிந்தனை என்னவெனில், பாருங்கள், ஏதோ வித்தியாசமான காரியம் உண்டு என்பதை நீங்கள்-நீங்கள் உணருகிறீர்கள். சபையானது திருப்திபடுத்தும் ஏதோ ஒன்றை-ஒன்றை உடையதாயி ருக்கவில்லை. ஆனால், நீங்கள், வேறு ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்டீர்கள், நீங்கள் அதற்காகவே பிறந்திருக்கிறீர்கள் என்று, நீங்கள் அதை உணர்ந்து கொண்டீர்கள். நீங்கள் அதன் ஒரு பாகமாயிருக்கிறீர்கள். நீங்கள், நீங்கள் ஒரு கரத்தில் ஒரு கையுறையைப் போல, அதற்குள் பொருந்துகிறீர்கள். அந்தக் காரணத்தினால்தான் நாம் இந்தக் காலையில் இங்கே ஒன்று கூடியிருக்கிறோம், ஏனென்றால் என்னுடைய வயோதிக தெற்கத்திய தாயார் வழக்கமாக கூறுவதுபோல, "ஒரே விதமான சிறகுடைய பறவைகள் ஒன்று கூடுகின்றன," ஏனென்றால் உங்களுக்கு பொதுவான காரியங்கள் உள்ளன. 49. பருந்துகளுக்கும் புறாக்களுக்கும் பொதுவானது கிடையாது. ஒரு புறாவினால் ஒரு பருந்தின் கீழ் குஞ்சு பொரிக்க முடியும் என்றிருந்தாலும், அவைகளுடைய உணவு முறை வித்தியாசமாக இருக்கிறது. அது உண்மை. துவக்கத்தில், அது என்னவாயிருந்தது என்பதைப் பொறுத்தது. இப்பொழுது, அதில், அந்த பருந்து மூலம் குஞ்சு பொரித்தாலும், அந்தப் பருந்து சிறிது நேரம் புறாவிற்கு தாயாக இருக்கலாம், ஆனால் முடிவிலே அது தன்னுடைய துணையைக் கண்டறியும். 50. அதைத்தான் சபையும் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் இயேசு வார்த்தையாயிருக்கிறார், அவரே மணவாளன், மணவாட்டி மணவாளனின் ஒரு பாகமாயிருக்கிறாள். ஆகையால் இந்த நாளில் நிறைவேற்றப்பட வேண்டிய வார்த்தை அவருடைய நாளில் நிறைவேற்றப்பட்ட அதே வார்த்தையின் பாகமாக உள்ளது, அது அதே வார்த்தை, அதே அனுபவம், அதே ஜீவன். 51. ஏனென்றால் தேவன் ஆதாமைப் பிரித்தபோது, அவன் இரு பிரிவானவனாயிருந்தான். ஆதாம் துவக்கத்தில் ஆவியாயிருந்தான் என்பதை நாம் கண்டறிகிறோம். "அவர் தம்முடைய சொந்த சாயலில் மனிதனை உண்டாக்கி, ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்." அதன்பின்னர், ஆதியாகமம் 2-ல் தொடர்ந்து, அவர் மனிதனை பூமியின் மண்ணிலிருந்து சிருஷ்டித்தார்...மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான் (தேவன் ஆவியாயிருக்கிறார்), எனவே அவன் ஒரு ஆவி மனிதனாயி ருக்கிறான். அதன்பின்னர் அவன் பூமியில் மாம்சமான மனிதனாக, மிருகத்தின் மாம்சமாக மாறும்போது, அவர்-அவர் இங்கே மணவாட்டியை, சித்தரித்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் எடுத்து வேறொரு ஜீவனை உண்டாக்கவில்லை, ஆனால் அவர் ஆதாமின் ஒரு பாகத்தை எடுத்து, மூல சிருஷ்டிப்பு, அவனிடத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து; ஆதாமிலிருந்து பெண்மையின் ஆவியை எடுத்து, ஆண்மைக்குரிய ஆவியை அங்கேயே விட்டுவிட்டு, அதை பெண்மைக்குரிய பாகத்தில் வைத்தார். ஆகையால், அவனுடைய ஆவியின் ஒரு பாகம், அவனுடைய சரீரத்தின் பாகம்; அவனுடைய மாம்சத்தின் மாம்சத்தை, அவனுடைய எலும்பின் எலும்பு; அவருடைய வார்த்தையின் வார்த்தை, அவருடைய ஜீவனின் ஜீவன், அந்தவிதமாகத்தான் மணவாட்டி கிறிஸ்துவுக்கு இருக்கிறாள்! 52. ஆகையால் தான் ராஜரீக வித்தின் எடுத்துக் கொள்ளப்படுதல் முதலாவதாக வர வேண்டும். மரித்த மற்றவர்களோ ஆயிரம் ஆண்டுகள் வரையிலும் உயிரோடிருக்கவில்லை, அதன்பின்னர் அவர்கள் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் கொண்டு வரப்பட்டனர். பாருங்கள், ராஜரீக வித்துக்கும், அல்லது ஆபிரகாமின் முன்குறிக்கப்பட்ட வித்துக்கும் நியாயத்தீர்ப்பு கிடையாது. இப்பொழுது நீங்கள் பரிசுத்த யோவான் 5:24-ஐ எடுத்துக் கொள்வீர்களானால், இதைக் கவனியுங்கள், "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு." 53. இப்பொழுது அது நம்முடைய அநேக வேத சாஸ்திரங்களிலிருந்து எப்படி அவ்வளவு வித்தியாசமாயிருக்கும்? இப்பொழுது நான் இங்கிருந்து நடந்து சென்று, ஒரு குடிகாரனிடம், "நீ விசுவாசிக்கிறாயா?" என்று கேட்க முடியும். "நிச்சயமாக!" ஒரு மனிதன் மற்றொரு மனிதனுடைய மனைவியிடம், "நீ விசுவாசிக்கிறாயா?" என்று கேட்டான். "நிச்சயமாக!" "வார்த்தையைக் கேட்க, நேற்றிரவு நீங்கள் கூட்டத்தில் அமர்ந்தி ருந்தீர்களா?" "நிச்சயமாக!" "நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?" "நிச்சயமாக!" அவர் அதை வெறுமனே கூறிக்கொண்டிருக்கிறார். 54. ஆனால் இந்த வார்த்தையின் மூல வியாக்கியானம், "என் வசனத்தை புரிந்துகொண்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன்." "புரிந்துகொள்கிறவனுக்கு," அதாவது, அது யாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதோ. 55. இயேசு, "என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என் பிதா எனக்குக் கொடுத்திருக்கிற யாவும், அவர்கள் வருவார்கள். என் ஆடுகளே, என் புறாக்களே, என் சத்தத்தைக் கேட்கும். அவைகள் அந்நியனைப் பின்பற்றாது" என்றார். தேவனுடைய சத்தம் என்றால் என்ன? தேவனுடைய வார்த்தை யாயுள்ளது. மனிதனுடைய வார்த்தையைத் தவிர எது அவனுடைய சத்தமாயிருக்கும்? அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது; அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்பார்கள். 56. ஆகையால் மாம்சப்பிரகாரமான சந்ததி, முதலில் இஸ்மவேல் மூலமாகவும், இரண்டாவதாக ஈசாக்கின் மூலமாகவும், அதன்பின்னர் அந்த வித்தினிடமாய் வருகிறது. தானியத்தின் தண்டு, பட்டுக் குஞ்சம், பதரைப் போல. இப்பொழுது, இங்கே, வித்தின் மூன்று கட்டங்களும் உண்மையான காட்சியை நமக்கு காண்பிக்கின்றன என்பதை இந்தக் காலையில் நீங்கள் என்னோடு கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் இங்கே புரிந்துகொண்டிருக்கிறோம். 57. நான் கல்வியறிவு இல்லாதவனாயிருக்கிறபடியால், நான் காணும் இயற்கையான காரியங்களை எடுத்துக்கொள்ள வேண்டிய தாயுள்ளது, எனக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ள ஆவிக்குரிய காரியங்களை மாதிரியாகக் காண்பிக்க வேண்டும், ஏனென்றால் என்னால் அதை எந்த இலக்கணத்திலும் உங்களுக்கு தெளிவாக புரிய வைக்க முடியவில்லை. 58. எப்படியாயினும், தேவன் எப்பொழுதுமே இயற்கையைக் கொண்டு ஆவிக்குரியதை மாதிரியாக்குகிறார். ஒரு வேதாகமம் இல்லாமலிருந் திருந்தாலும், கிறிஸ்தவ மார்க்கம் சரியாயிருந்தது என்பதை நான் அப்பொழுதும் அறிந்திருப்பேன், ஏனென்றால் முழு பூமியும் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலின் பேரில் சுழல்கிறது. இயற்கையானது மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலில் கிரியை செய்கிறது. 59. மரத்திலிருந்து வெளிவரும் சத்தைப் பாருங்கள், அது எப்படி இலைகளை, கனிகளைக் கொண்டு வருகிறது, உதிருகின்றன; குளிர்ந்த குளிர்காலத்திற்காக பூமிக்குள்ளாக, புல்வெளிக்கு கீழே செல்கிறது; மீண்டும் வசந்த காலத்தில் புதிய ஜீவனோடு எழும்புகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு ஜீவன் உண்டு என்றும், ஒரு மரணம் உண்டு என்றும், ஒரு உயிர்த்தெழுதல் உண்டு என்றும் சாட்சி பகருகிறது. 60. ஒரு காலையில் சூரியன் உதிக்கின்றது, ஒரு சிறு குழந்தை பிறந்து, மிகவும் பலவீனமாக உள்ளது. ஏழு அல்லது எட்டு மணிக்கு, அது பள்ளிக்குச் செல்லத் துவங்குகிறது. பத்து அல்லது பதினொரு மணிக்கெல்லாம், அது கல்லூரியை முடித்துவிடுகிறது. அது ஏறக்குறைய பதினொரு மணி முதல் மூன்று மணி வரை தன்னுடைய பலத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது, அதன்பின்னர் அது பலவீனமடையத் துவங்குகிறது. சாயங்கால நேரத்தில் அது அஸ்தமித்து, ஒரு வயோதிக மனிதனாய் பலவீனமடைகிறது. அதுதான் அதன் முடிவா, அது மரித்துப் போகிறதா? இல்லை. அடுத்த நாள் காலையில் அது மீண்டும் எழும்புகிறது. பார்த்தீர்களா? 61. முழு இயற்கையே, உங்களுடைய உண்மையான மெய்யான வேதாகமம் இந்த வேதாகமத்தோடு சாட்சி பகர்கிறதே! அதைத்தான் இப்பொழுது நான் இந்தக் காலையில் உங்களுக்கு காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன், இயற்கையினூடாக நீங்கள் தேவனுடைய வார்த்தையை, தேவனுடைய வார்த்தைக்கு மாதிரியாய் இருப்பதைக் காண்பீர்கள், ஏனென்றால் இயற்கையானது தேவனுடைய உருவாக்கமாயுள்ளது. 62. விஞ்ஞானத்தைப் போலவே, அவர்கள் இயற்கையின் இயக்க முறைமைகளையும், விதிகளையும் கண்டறிந்துள்ளனர், ஆனால் அந்த இயற்கை என்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் இயற்கையின் ஜீவனை அறியாதிருக்கிறார்கள். அதுதான் தேவன். ஆகையால் இயங்கும் சக்தியில்லாமல் இயங்கும் முறை நல்லதல்ல. 63. இப்பொழுது, தண்டு, பட்டுக்குஞ்சம், பதர், கவனியுங்கள். ஆகார் இங்கே தண்டுக்கு அடையாளமாக இருக்கிறாள், அது வாக்குத்தத்தத்தில் துவங்கிய முதல் ஜீவனாயிருந்தது. சாராள் பட்டுக் குஞ்சத்தை, இல்லை பட்டுக் குஞ்சத்தில் வருகிற, மகரந்தப் பொடியைக் குறிக்கிறாள். மரியாள், கன்னி, உண்மையான தண்டை தோன்றச் செய்ய, உண்மையான ஆவிக்குரிய வித்தை பிரதிநிதித்துவப்படுத்தி, பிறப்பித்தாள். ஆகார், சாராள், இருவருமே பாலுறவினால் பிறப்பித்தனர். ஆனால் மரியாள், கன்னி, கன்னிப் பிறப்பினால், தேவனுடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் வல்லமையினால் இருந்தாள். அவள் அசலான வித்தை பிறப்பித்தாள். தண்டு, ஆகார், இரண்டாம் மனைவி, வாக்குத்தத்தத்தின் சந்தேகத்தினால், ஒரு சந்தேகத்தினூடாக சற்று, கிரியை செய்தாள். 64. தேவன் நமக்கு உதவி செய்வாராக என்று, நான் நம்புகிறேன். நான்...நீங்கள் இதை மிக அவசியமாக புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அதைக் குறித்து சிறிதளவும் சந்தேகிக்க முடியாது. அது உள்ளபடியே நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு வியாக்கியானம் தேவையில்லை. வேதம், "தேவனுடைய வார்த்தை எந்த சுயத்தோற்றமான பொருளை உடையதாயிராது" என்று கூறுகிறது. அவருடைய வார்த்தையை வியாக்கியானிக்க தேவனுக்கு நம்முடைய பள்ளிகள் எதுவும் தேவையில்லை. அவர் அதை ரூபகாரப்படுத்தி, அதை ஜீவிக்கச் செய்யும்போது, அதுவே அதனுடைய வியாக்கியானமாயுள்ளது. தேவன், "வெளிச்சம் உண்டாகக்கடவது" என்று கூறியபோது, வெளிச்சம் உண்டானது. அது வியாக்கியானம் செய்யயப்பட வேண்டியதில்லை. அவர், "ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்" என்று கூறியபோது, அவள் கர்ப்பவதியானாள். அது வியாக்கியானிக்கப்பட வேண்டியதில்லை. 65. நமக்கு இவையனைத்தும், அதனுடைய வேதபாட கருத்தரங்குகள் மற்றும் மனிதரை புரிந்துகொள்ள வைக்கிற காரியங்கள் தேவையில்லை, "பாருங்கள், நாம் வியாக்கியானத்தை பெற்றுள்ளோம். நாம் வியாக்கியானத்தை பெற்றுள்ளோம்." 66. தேவன் தாமே தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானிக்கிறார். அவருக்காக யாரும் வியாக்கியானிக்க வேண்டியதில்லை. அவர், "அது சம்பவிக்கும்" என்றார். அது சம்பவிக்கிறது. கடைசி நாட்களில், அவர் தம்முடைய ஆவியை ஊற்றுவதாகக் கூறினார், அவர் அதைச் செய்தார். ஸ்தாபனங்கள் என்ன கூறினபோதிலும் நான் கவலைப்படுகிறதில்லை, எப்படியும், அவர் அதைச் செய்தார், ஏனெனில் அவர் அதைச் செய்வார் என்று அவர் கூறினார். ஆகையால், அதற்கு வியாக்கியானம் அவசியமில்லை, ஏனென்றால் தேவன் தம்முடைய சொந்த வியாக்கியானத்தையேச் செய்கிறார். 67. நீங்கள் காணும் இந்தக் காரியங்கள், இப்பொழுது உங்களுக்கு இரகசியமாகத் தென்படுகிறது, நீங்கள்...முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, பெந்தகோஸ்தே மக்களே, உங்கள் ஊழியத்தை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள், இது இன்றைக்கும் உங்களுக்கு உள்ளது போலவே, மெத்தோடிஸ்டு மற்றும் பாப்டிஸ்டு சபைக்கு அவ்வளவு இரகசியமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அதை வார்த்தையில் கண்டறியலாம். நீங்கள் அவைகளை காண்பிக்க முயற்சித்தது போல நானும் உங்களுக்கு காண்பிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதன்பின்னர் தேவன் திரும்பி, அது அவ்வண்ணமாய் உள்ளது என்று வார்த்தையில் கூறுவாரேயானால், அது அவ்வண்ணமாய் இருப்பதை அப்பொழுது அது உறுதிப் படுத்தினால், அது தேவனுடைய சொந்த வியாக்கியானமாயுள்ளது. உங்களுக்காக யாரும் வியாக்கியானிக்க வேண்டியதில்லை. 68. இப்பொழுது, ஆகார், "சற்று" என்பதன் மூலம்! நீங்கள் அதிலிருந்து ஒரு வார்த்தையையும் எடுத்துப் போட முடியாது என்பதை, நினைவில் கொள்ளுங்கள். இயேசு, வெளிப்படுத்தினவிசேஷத்தில் புத்தகத்தின், முடிவிலே கூறினார். புத்தகத்தின் முதலாம் பாகத்தில், கிறிஸ்து, "வார்த்தையிலிருந்து ஒரு துண்டை எடுத்துப் போடுகிற எந்த மனிதனும்!" என்றார். நாம் பெற்றிருந்த ஒவ்வொரு சுகவீனத்திற்கும், மரணத்திற்கும் ஒரு வார்த்தை மாத்திரம் தவறாக வியாக்கியானிக்கப் பட்டதே காரணமாகும். பாருங்கள், பரிசுத்தமான தேவன் கீழ்நோக்கிப் பார்த்தார்; ஒரு வார்த்தையை சற்று தவறாக வியாக்கியானித்ததே இந்த குழப்பம் எல்லாவற்றுக்கும் காரணமாய் இருந்தது, அந்த உன்னதமான வார்த்தைக்கு விரோதமான இந்த ஒரு சிறு காரியமே இந்த எல்லா குழப்பத்திற்கும் காரணமாயிருந்தது; இந்த பயங்கரமான காரியத்தை அவரோடு ஒப்புரவாக்கும்படியாக, தம்முடைய சொந்த குமாரன் பாடுபட்டு, இரத்தம் சிந்தி மரித்தார்; முழு வார்த்தையையும் கடைபிடிப்பதைக் காட்டிலும் குறைவான ஒன்றை நாம் எப்படி பெற்றுக்கொள்ளப் போகிறோம்? 69. "பாருங்கள்," நீங்கள், "சகோதரன் பிரான்ஹாம், அது ஆதியாகமத்தில் இருந்தது" என்று கூறினீர்கள். நான் அதை உணர்ந்தேன், பாருங்கள். 70. ஆனால் வெளிப்படுத்தின விசேஷம், அது புத்தகத்தின் கடைசி பாகமாயிருக்கிறது என்பதை, நான் உங்களுக்கு கூறட்டும். "இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்திலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டால், அல்லது அதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால், ஜீவ புஸ்தகத்திலிருந்து அவனுடைய பங்கு எடுத்துப் போடப்படும்." 71. இயேசு, புத்தகத்தின் நடுவில் கூறினாரே! உங்கள் மூன்று சாட்சிகள் மீண்டும் உள்ளனர்: ஆதியாகமம், புதிய ஏற்பாடு மற்றும் இன்றைய நாள். இயேசு, "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்றார். "பாருங்கள், அவர் அதை பொருட்படுத்திக் கூறவில்லை." 72. அவர் வேத சாஸ்திரிகளாயிருந்த, மிக உயர்ந்த ஜனங்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். அந்த ஆசாரியர்கள், அவர்களுடைய பூட்டனாரின் பூட்டனாரும், பெரிய பாட்டனார்களும் ஆசாரியர் களாயிருக்க வேண்டியதாயிருந்தது. அதைக் குறித்த ஒரு வார்த்தையை தவறாக புரிந்து கொண்டால், ஏன், அது முற்றிலும் ஒரு மரண தண்டனையாயிருந்தது. அவர்கள் கல்லெறியப்பட வேண்டிய தாயிருந்தது, ஏனென்றால் ஒரு வார்த்தை தவறிப் போனது. ஆனால் அவர்கள் அதைக் குறித்த தவறான வியாக்கியானத்தைக் கொண்டிருந்தனர். ஆகையால் வார்த்தை தாமே; தேவன் மேசியாவை அனுப்புவதாக வாக்களித்தபோது, அது உள்ளே வரும் என்று அவர் வாக்குத்தத்தம் செய்திருந்த அதே துணியில் அதை அனுப்பினார், அது சுற்றப்படுவதற்காக அவர்கள் ஒரு வித்தியாசமான துணியை வைத்திருந்தனர். 73. நான் இதைக் கூறட்டும்: இன்றைக்கும் அவ்வாறே உள்ளது, அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை! அது ஸ்தாபனக் கொள்கையிலோ அல்லது அறிவாற்றல் கொண்டோ அல்ல. அது வல்லமையையும் உயிர்த்தெழுதலையும் சுற்றியிருந்த, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வெளிப்பாடாக இருக்கிறது, தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணின விதமாகவே, அதைக் குறித்து ஜனங்களுடைய சிந்தனைகளில் இருந்த விதமாக அல்ல. 74. இப்பொழுது, ஆகார், ஒரு சிறு வித்தியாசத்தினால், ஸ்திரீயினூடாக, இப்பொழுது ஆபிரகாமின் மூலமாக அல்ல. ஆபிரகாம் அதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் தேவன் அவன் அதைச் செய்ய அனுமதித்தார், ஏனென்றால் அவன்...அதேக் காரியம், அவர் பிலேயாமைச் செய்ய அனுமதித்தார். இப்பொழுது கவனியுங்கள், அதனோடு சற்று வித்தியாசப்பட்டதன் மூலம், அவள் இஸ்மவேலை பிறப்பித்தாள், அவன் ஒரு காட்டு மனிதனாயிருந்தான், ஒருபோதும் ஜெயங்கொள்ளவேயில்லை. அவன் தன்னுடைய வில்லைக் கொண்டு வாழ்ந்தான். அவன் ஒரு காட்டு மனிதனாயிருந்தான். அவன் இன்றைக்கு இன்னமும் இருக்கிறான். 75. இப்பொழுது சாராள், பட்டுக் குஞ்சம், இல்லை மகரந்தப் பொடி, சாராள், வாக்குத்தத்தத்தின் உண்மையான மனைவி, ஒரு கனிவான மனிதனைப் பிறப்பிக்கிறாள், அதுவே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒரு தேசத்தை கொண்டு வந்தது. 76. இப்பொழுது, ஆனால், மரியாளோ, பாலுறவு அல்ல, ஆனால் ஒரு வாக்குத்தத்தத்தின் மூலமாக, ஆபிரகாம் தேவனிடமிருந்து வாக்குத்தத்தத்தைப் பெற்றுக்கொண்டது போல, தேவனுடைய வார்த்தை, ஆனால் "இதோ கர்த்தருடைய அடிமை" என்ற வாக்குத் தத்தத்தை விசுவாசித்தாள், பாருங்கள், ஒரு தண்டையல்ல, மூல வித்தை, ஏனென்றால் அவர் ஆபிரகாம் விசுவாசித்த, மரியாளும் விசுவாசித்த வார்த்தையாயிருந்தார். 77. இப்பொழுது, மரியாள் வித்தாக இருக்கவில்லை, அவள் வித்திற்குப் பதராக மாத்திரமே இருந்தாள். மற்ற இரண்டும் ஜீவனை சுமப்பவர்களாக, மாம்சப்பிரகாரமான வித்தை மாத்திரமே உடையவர்களாயிருந்தனர். மரியாள் தானே, வித்து அல்ல; ஆனால் தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் கொண்டு, ஒரு உண்மையான வார்த்தையின் சாயலை கொண்டு வந்தது, ஏனென்றால் அவர் வார்த்தையாயிருந்தார். ஆனால் பதரை, அந்த...ஒரு கோதுமை மணியைப் போல, ஒரு கோதுமை மணியைப் போல, பதர் கோதுமையை அதனுள் அடக்கி வைத்துக்கொண்டு, அது தானாகவே செல்ல முடியும் வரை அல்லது முதிர்ச்சியடையும் வரை அதை பாதுகாக்கிறது. பார்த்தீர்களா? அதன்பின்னர், அந்த வித்து தானே அவளை விட்டுச் சென்றது. அந்த வித்து அவளுடைய கர்ப்பத்தில் இருந்தது போல, அவள் வித்து அல்ல. அவள் வித்தை உற்பத்தி செய்யவில்லை. தேவன் வித்தாயிருக்கிறார். 78. இப்பொழுது, அப்பொழுது இருந்த இரத்தம், யூத இரத்தத்தினால் நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று அநேக ஜனங்கள் நினைக்கின்றனர். மேலும் அவர்களில் சிலர், "சரி, புறஜாதிகள் மூலம் நமக்கு உரிமை கிடைத்தது, ஏனென்றால் ராகாப் என்னும் வேசியும், மோவாபியனாகிய ரூத் போன்றவர்களும், அவர்கள் புறஜாதிகளாய் இருந்தனர்" என்றனர். உங்களுக்கு அதைக் குறித்து எந்த உரிமையும் கிடையாது, எந்த ஒரு உரிமையும் கிடையாது. அவர் யூதனுமல்ல, புறஜாதியாயுமல்ல. 79. அவர் தேவனாய், லோகாஸாய், தேவனிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தையாயிருந்தார். அது பூமியின் மேல் அசைவாடத் துவங்கினபோது, அது கடல் ஜீவன்களைப் பிறப்பித்தது. தேவனுடைய ஆவி, லோகாஸ், "உண்டாகக்கடவது" என்று தேவன் கூறின வார்த்தை, அங்கே லோகாஸ் சென்றது, அது வார்த்தையாயுள்ளது. வார்த்தை...ஏனென்றால் இவை யாவும் லோகாஸில் இருந்தன; தேவனுடைய முழு வார்த்தையும், முழு வேதாகமமும், ஒவ்வொரு காலத்திற்காகவுமே, லோகாஸ் பூமியின் மேல் சுவாசிக்கத் துவங்கினபோது, அங்கே கடல் ஜீவன்கள் தோன்றின. பறவை ஜீவனையும், மிருக ஜீவனையும் உருவாக்குகிறது. இறுதியாக பிரதிநிதித்துவத்தில் ஏதோ ஒன்று வந்தது, அல்லது அதன் மேல் அசைவாடி அதைப் போன்ற காரியத்தை கொண்டு வந்தது போன்று காணப்பட்டது, தேவன், தேவனுடைய சாயலான ஒரு மனிதன். 80. விதை விழ வேண்டியது போல, அந்த மனிதன் விழுந்தான். வீழ்ந்தப் பிறகே, அதன் பின்னரே தேவன் அதன் மேல் அசைவாடத் தொடங்குகிறார். அவர் ஒரு-ஒரு ஏனோக்கைக் கொண்டு வந்தார், அவர் ஒரு எலியாவைக் கொண்டு வந்தார், அவர் ஒரு மோசேயைக் கொண்டு வந்தார், அவர் தீர்க்கதரிசிக்குப் பின் தீர்க்கதரிசியை கொண்டு வந்தார், மீண்டும் அந்த சாயலை திரும்பளிக்க முயற்சிக்கவே. மேலும், இறுதியாக, தேவனுடைய அசலான சாயல் மீண்டும் பூமியின் மேல் வந்தது, அது தேவனாயிருந்தது, லோகாஸ் மாம்சமாகி நமக்கு மத்தியில் வாசம் செய்தார். 81. இப்பொழுது அதே லோகாஸ் ஒரு பாகத்தை உடையதாயுள்ளது, அவர் ஒரு மணவாட்டியை உடையவராயிருக்கிறார், அதே லோகாஸ், மாற்ற முடியாத இந்த வார்த்தையானது, இன்றைக்கு சபைகளின் மேல் அசைவாடி, வார்த்தையை அதனுடைய முழு வெளிப்படுத்துதலுக்கு திரும்ப கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தீர்க்கதரிசிகள் அந்த வித்தை சுமந்து செல்பவர்களாக இருந்தனர், சபை ஸ்தாபனங்கள் இப்பொழுது அந்த வித்தை சுமந்து செல்பவர்களாக இருந்து வருகின்றன. இப்பொழுது கவனியுங்கள், துரிதமாக, ஆனால் பதரானது பற்றிக் கொண்டிருப்பது போல, இப்பொழுது வித்து பிடித்துக் கொண்டிருக்கிறது, அதன் பின்னர் அது வித்தை விட்டுச் செல்கிறது. 82. இயேசு தேவனாயிருந்தார். அவர் அப்படித்தான் இருந்தார். அவருடைய பிதாவே மகத்தான லோகாஸாய் தானே இருந்தார். மோசே ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அவரால் அவை எல்லாவற்றையும் அவனுக்குள் ஊற்ற முடியவில்லை. 83. கர்த்தருடைய வார்த்தை எப்பொழுதுமே, ஒருபோதும் தவறிப் போவதில்லை, தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது. வார்த்தையின் சரியான வியாக்கியானம் ஒரு வேத சாஸ்திரியிடம் வருகிறது என்று வேதாகமத்தில், எந்த இடத்திலும் இல்லை, எந்த காலத்திலும் இல்லை, அல்லது வேதாகம காலத்தில் இருந்தேயில்லை. அது வேத வாக்கியங்களில் இல்லை. பரிசேயர்களும், சதுசேயர்களும் ஒரு போதும் அவ்வாறு செய்ததில்லை, அவர்களில் எவரிடத்திலிருந்தும் தேவன் ஒரு தீர்க்கதரிசியையும் எழுப்பவில்லை. இந்த கடைசி நாட்களிலும் அவர் ஒருபோதும் எழுப்பவில்லை. 84. அவர்கள் அதை எழுப்பினவுடனே, அவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து, அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டால், அது அங்கே மரித்துவிடுகிறது. ஆனால் ஒரு நோக்கத்திற்காகவே அவர் இதைச் செய்தார். நாம் அதை விளக்க முயற்சிப்போம், தேவன் நமக்கு உதவி செய்வார். கவனியுங்கள், இப்பொழுது வித்தான, சபை, அவள் இங்கே எவ்வளவு நெருக்கமாக காணப்படுகிறாள் என்பதைப் பாருங்கள், அந்த வித்தைப் போலவே தோற்றமளிக்கின்றன. 85. இப்பொழுது நீங்கள் கவனியுங்கள், விதை நிலத்திற்குள் செல்லும்போது, அது மூல விதையாயிருக்கிறது. அது பிறக்கும்போது, அது ஒரு ஜீவனைப் பிறப்பிக்கிறது. ஆனால் ஒரு கோதுமை விதைக்கு வெளியே ஜீவனானது என்ன செய்ய முடியும்? அப்பொழுது அது அதே கோதுமை தண்டையோ அல்லது அதே கோதுமை மணியையோ உற்பத்தி செய்கிறதில்லை. அது கோதுமையின் ஜீவனாயிருக்கிறது, ஆனால் அது ஒரு சுமக்கும் தண்டான நிலையில் உள்ளது. லூத்தர் குழப்பத்தின் இருளிலிருந்து வெளியே வந்தபோது, அதுவே முதல் சீர்திருத்தமாக இருந்தது. அது மரிக்க வேண்டியதாயிருந்தது. 86. எனவே அநேக சமயங்களில், ஜனங்கள் அனுதாபப்படுகின்றனர். ஓ, நான் அண்மையில், உங்களை தேவனிடத்திலிருந்து திசை திருப்ப முயற்சிக்கின்ற இந்த நவீன தத்துவஞானிகள் சிலரினால் அளிக்கப்படுகிற அமைதியான தேவன் என்ற, தலைப்பில் ஒரு புத்தகத்தைப் படித்தேன். நீங்கள் தேவனுடைய வார்த்தையையும், தேவனுடைய திட்டத்தையும் அறியாமலிருந்தால், நீங்கள் எளிதில் அசைக்கப்பட முடியும். ஆனால் நீங்கள் தேவனுடைய திட்டத்தை, அவருடைய திட்டத்தை காணும்போது, அப்பொழுது விசுவாசத்தினாலே அது தேவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்; தேவன் தம்மை அடையாளங்காட்டி, மற்ற காலங்களில் அவர் செய்ததையே செய்து, சஞ்சரித்து, நிரூபித்து வருகிறார். 87. அந்தக் காரணத்தினால்தான் மோசேயை அசைக்க முடியவில்லை. அவன் தேவனோடு முகமுகமாய்ப் பேசினான், தேவன் அவனிடம், "முன்பு ஆபிரகாமுடன் இருந்த ஒருவர் நான்தான். நான்தான் இந்த வாக்குத்தத்தத்தை செய்திருக்கிறேன். நான் உன்னோடு கூட இருப்பேன்" என்று சொன்னார். அப்படியானால் நீங்கள் எப்படி அந்த மனிதனை நிறுத்தப் போகிறீர்கள்? 88. பண்டைய தீர்க்கதரிசி கூறினது போல, "சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?" இந்த வேளையில் தேவன் வாக்குத்தத்தம் செய்த காரியங்களை நாம் காணும்போது, அது வெளிப்படுவதைக் காணும்போது, அதுதான் அவருடைய வழி என்பதை நீங்கள் காணும்போது, உங்களால் எப்படி அசையாமல் நிற்க முடியும்? அவர் என்னக் கூறினாரோ, அது நடக்கும். எல்லா இரகசியமான காரியங்களையும் பாருங்கள், ஆனால் அது சம்பவிக்கும் என்று தேவன் கூறின விதமாகவே அது சம்பவிக்கும். 89. இப்பொழுது கவனியுங்கள், "அவள்" அதை எடுத்துச் செல்லுகிறாள். இப்பொழுது, ஆகார் ஒரு தண்டைப் போன்று தோன்றி, அதன்பின்னர் மகரந்தப் பொடியும், அதன்பின்னர் பதரும், அதன்பின்னர் விதையும் தோன்றினது. இப்பொழுது இந்த சுமந்து செல்பவைகளைக் கவனியுங்கள், நீங்கள் முதலில், கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 90. இப்பொழுது, தண்டு வித்தைப் போன்று காணப்படவில்லை, ஆனால் வித்தில் இருந்த ஜீவன் தண்டில் உள்ளது. அதுதான் லூத்தர். இப்பொழுது, சிறிய தண்டில் அநேக கதிர்கள் உள்ளன; அது லூத்தரிடமிருந்து ஸ்விங்கிலிக்கு, கால்வின் மற்றும் இன்னும் அநேகர் வரை சென்றது. 91. இப்பொழுது கவனியுங்கள், அதன்பின்னர், அது தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டது. இப்பொழுது இயற்கையானது தேவனுடைய வார்த்தைக்கு மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் என்று சூரியனைப் போன்று உருவாகுவதைக் கவனியுங்கள். அதன்பின்னர் மகரந்தப் பொடி உண்டானது, அது வெஸ்லியாயிருந்தது. அங்கே அநேக சிறு மகரந்தத் தூள்கள் அதில் பற்றிக் கொண்டிருந்தன, அது கோதுமையிலோ அல்லது தானியத்திலோ அந்த இலை செய்ததைக் காட்டிலும் முழுவதுமாக வித்தைப் போலவே காணப்பட்டது. அது போன்று இன்னும் நிறைய காணப்பட்டது; ஏனெனில், வெஸ்லி தேவனுடைய இரண்டாம் வார்த்தையை, தேவனுடைய இரண்டாவது வார்த்தையை, தம்முடைய சபையை மேலே கொண்டு வந்து, பரிசுத்தமாகுதலினூடாக வந்தார். அதுவே அவருடைய செய்தியாயிருந்தது. சரி. 92. அதன்பின்னர், சிறிது நேரம் கழித்து, அது விழுந்து, மீண்டும் தண்டுக்குள் சென்று, ஒரு சோளக் கதிரை கொண்டு வந்தது. ஆனால் இந்த கதிர் வளரத் துவங்குவதற்கு முன்பே, ஒரு அசைவு, பதர், உறை, உமி இருந்தது. எந்த கோதுமை பயிரிடுபவரோ, சோளம் பயிரிடுபவரோ, நீங்கள் அதைக் கொண்டு அங்கே தோண்டியெடுத்து, அந்த சோளக் கதிரை அல்லது அந்த கோதுமை கதிரைப் பறித்தால், அந்த சிறிய-அந்த சிறிய முதல் சிறிய காரியம் அந்த கோதுமை மணி என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், இப்பொழுது, பெந்தேகோஸ்தே காலம் உள்ளது. இப்பொழுது உங்களால் முடியாது, நீங்கள், எந்த வேத சாஸ்திரியும் அல்லது... 93. சரியாகக் கூறினால், அந்தவிதமாகத்தான் காலங்கள் தோன்றின என்பதை, எந்த வரலாற்றாசிரியரும் அறிவர். வெளிப்படுத்தின விசேஷப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு, சபைக் காலங்களை எடுத்துக் கொண்டு, அவைகள் வெளிப்படுகிற விதமாக சரியாக அது இருக்கிறதா என்று பாருங்கள். 94. இப்பொழுது, வெஸ்லியிலிருந்து யாத்திரீக பரிசுத்தர், நசரேயன்கள், மற்றும் அந்த சிறிய பரிசுத்த சபைகள் தோன்றி, லூத்தரன் சீர்த்திருத்தம் என்னவாயிருந்ததோ அதைக் காட்டிலும் வார்த்தைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. ஆனால், நீங்கள் பாருங்கள், லூத்தர் ஸ்தாபனம் உண்டாக்கினபோது, அதுவே அந்த கதிர்களை உண்டாக்கத் துவங்கினது. இது வளர்ந்தபோது, ஆவியானவர் முழுமையாக அந்த லூத்தரன் சபையை விட்டு சென்றுவிட்டார், அது முழுமையாகவே ஸ்தாபனமாயிற்று, ஆனால் மெய்யான உண்மையான விசுவாசிகள் பரிசுத்தமாகுதலுக்குள் சென்றனர். 95. அதன்பின்னர் பரிசுத்தமாக்கப்படுதல் இடம் பெயர்ந்தபோது, யாத்திரீக பரிசுத்த சபை, மற்றும் பல, எல்லா பரிசுத்த ஸ்தாபனங்களும், நசரேயன்கள் போன்றவை, அது அங்கிருந்து நகர்ந்து, சரியாக இந்த பெந்தேகோஸ்தே காலத்திற்குள் நுழைந்தது. இப்பொழுது அந்த சிறு கோதுமை, மணியைப் பாருங்கள், அது நிலத்திற்குள் சென்ற, தண்டு செய்ததைக் காட்டிலும் அல்லது மகரந்தப் பொடி செய்ததைக் காட்டிலும், கோடிக்கணக்கான மடங்கு அதிக மூல கோதுமையாகக் காணப்படுகிறது. ஆனால் நீங்கள் உட்கார்ந்து கொண்டு, அதை ஒரு கண்ணாடிக்கு அடியில் வைத்து, அந்த சிறு பதர்களை திறந்து பார்த்தால், அவைகளும் கூட வெறுமனே சுமந்து செல்பவைகளே. தானியம் இன்னும் துவங்கவில்லை. அது சற்று பின்புறத்தில் உள்ள மொட்டு போன்றது, ஒரு பெரிய உயர் சக்தியுடைய கண்ணாடியினால் அந்த சிறிய நுனியை, ஒரு முனை போன்று, அங்கே விதை தோன்றுவதை உங்களால் காண முடியும். இந்த பதரானது உண்மையான காரியத்தைப் போன்றே காணப்படுகிறது, அது உண்மையான காரியம் அல்ல. அது ஒரு கர்ப்பப்பை மாத்திரமே. 96. மரியாளின் கர்ப்பத்தைப் போல. மரியாள் வித்து அல்ல, இங்கே தண்டின் பிரதிநிதித்துவம். மற்றவைகளைப் போலவே, அவள் அதை சுமந்து செல்பவளாக மாத்திரமே இருந்தாள். ஆனால் இந்த நோக்கத்திற்காகவே தேவனால் தாமே முதலில் அழைக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டு, அவள் தேவனுடைய தாய் என்று, நம்முடைய கத்தோலிக்க நண்பர்கள் நினைப்பது போன்றே காணப்பட்டது. இல்லை, அவள் தேவனுடைய தாயாயிருக்கவில்லை, அவள் தேவனுடைய வித்துமல்ல. 97. பெண் முட்டையை உற்பத்தி செய்கிறாள். தேவன் ஜீவனை உற்பத்தி செய்கிறார். செந்நிற இரத்த அணு, இரத்தம், ஆண் பாலினத்தில் உள்ளது. 98. ஒரு கோழி ஒரு முட்டையிடலாம் அல்லது ஒரு பறவை ஒரு முட்டையிடலாம், வசந்த காலத்தில் தன்னுடைய கூட்டைக் கட்டலாம், ஆனால், அந்தப் பெண் பறவை ஆண் பறவையோடு இருக்கவில்லை யென்றால், அது குஞ்சு பொறிக்காது. அது மரித்து விடுகிறது. அது கூட்டிலேயே அழுகிவிடும். 99. நான் அடிக்கடி கூறினதுபோல, இன்றைக்கு சபைகளோடுள்ள காரியமும் அதுதான், அவைகள் கூட்டிலேயே அழுகிக் கொண்டு, மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தேகோஸ்துக்கள் என்பது போன்று அழைக்கப்படுகின்றனர். அவை தாமே வார்த்தையோடு தொடர்பு கொள்ளவில்லையென்றால், அவைகள் தங்களுடைய ஸ்தாபனத்தில், கூட்டுக்குள்ளாகவே அழுகிவிடும். 100. இப்பொழுது, இப்பொழுது அவர்களில் சிலர் கூறுகிறார்கள், புராட்டஸ்டெண்டுகள் ஏறக்குறைய மரியாளே முட்டையைப் பிறப்பித்ததாக நம்புகின்றனர். அது அவ்வாறிருக்குமானால், நீங்கள் யேகோவா தேவனை என்ன செய்ய வைக்கிறீர்கள் என்று பாருங்கள். ஒரு உணர்ச்சியின்றி முட்டையை உற்பத்தி செய்ய முடியாது. 101. எனவே, நீங்கள் பாருங்கள், தேவன் முட்டையையும், விந்தணுவையும் உண்டாக்கினார், அவர் மரியாளின் கர்ப்பத்தில் இரண்டையுமே சிருஷ்டித்தார். அந்த மனிதன் தேவனேயன்றி வேறல்ல, தேவன்தாமே மாம்சமாகி நம் மத்தியில் வாசம் பண்ணினார், இம்மானுவேல், வெறுமனே ஒரு அருமையான மனிதனோ, ஒரு தீர்க்கதரிசியோ அல்ல; அவர் அருமையான மனிதனும் தீர்க்கதரிசியுமாய் இருந்தார்; ஒரு போதகர் அல்ல, ஒரு வேத சாஸ்திரி அல்ல. ஓ, அவர்-அவர் அந்த எல்லாக் காரியங்களிலும் இருந்திருக்கலாம்; அவர் எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தார். ஆனால் அவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தேவனாக இருந்தார். வேதம், "நாம் தேவனுடைய இரத்தத்தினால் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளது. தேவன் தாமே, ஒரு மூன்றாம் நபரோ அல்லது இரண்டாவது நபரோ அல்ல. அந்த நபர், தேவன் தாமே, மகத்தான யேகோவா, மரியாளின் மேல் நிழலிட்டார்; சிருஷ்டிகரையும், இரத்த அணுவையும், ஜீவனையும், முட்டையையும் சிருஷ்டித்தார். 102. நீங்கள் ஒரு யூதன் அதை அறிந்து கொள்ளச் செய்ய முடிந்தால், நீங்கள்...மேசியா யார் என்பதை அவன் அறிந்து கொள்வான். அந்த ஜான் ரைன் அங்கே பெண்டன் ஹார்பரில், நாற்பது வருடங்களாக குருடாயிருந்து சுகமடைந்தபோது. அந்த ரபி என்னிடம் கேட்டார், அவர் கூறினார், நான் அவரோடு ஒரு நேர்காணல் நடத்தினேன், அவர், "நீங்கள் தேவனை மூன்று துண்டுகளாக வெட்டி, அவரை ஒரு யூதனுக்கு கொடுக்க முடியாது" என்றார். 103. நான், "அவர்களில் சிலர் அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் நாங்கள் தேவனை மூன்று துண்டுகளாக வெட்டுகிறதில்லை" என்றேன். நான், "நீங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீர்களா?" என்று கேட்டேன். அவர், "நிச்சயமாகவே தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறேன்" என்றார். 104. அதற்கு நான், "ஏசாயா 9:6-ல், 'நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்', என்று யாரைக் குறித்து ஏசாயா கூறினார்?" என்று கேட்டேன். அவர், "ஏன், அது மேசியாவாயிருந்தது" என்றார். 105. நான், "மேசியா தேவனுக்கு என்ன உறவாயிருப்பார்?" என்று கேட்டேன். அது தீர்வை உண்டாக்கிவிட்டது. நான், "இப்பொழுது..." என்றேன். அவர், "அவர் தேவனாயிருப்பார்" என்றார். 106. நான், "முற்றிலும் சரி. 'அவருடைய நாமம் ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்'" என்று கூறினேன். 107. அங்கேதான் ஒருத்துவம் அதைத் தவறவிட்டது, அங்கேதான் திரித்துவம் அதைத் தவறவிட்டது, சாலையின் இருபுறங்களிலுமே. ஆனால் சரியான நடுத்தரமானது இடையில் உள்ளது. தேவன் தம்முடைய சொந்த பிதாவாக இருக்க முடிந்தால், இயேசு தம்முடைய சொந்த பிதாவாக இருந்திருந்தால், அவரால் அப்படி இருக்க முடியாது. தேவனைத் தவிர அவருக்கு வேறொரு பிதா இருந்திருந்தால், "பரிசுத்த ஆவி" அவருடைய பிதா என்று வேதம் கூறியிருந்தால், அவை இரண்டும் வெவ்வேறு ஆவிகளாயிருந்தால், அவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளையாயிருந்திருப்பார். அது உண்மை. அவருடைய பிதா யார், தேவனா அல்லது பரிசுத்த ஆவியா? நீங்கள் ஒன்றைக் கூறினால், நீங்கள் எவ்வளவு சங்கடப்படப் போகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். தேவன் அவருடைய பிதாவாயிருந்தார். அது சரியா? 108. மத்தேயு 1:18-ல் அவர் கூறினார். இயேசு கிறிஸ்துவினுடைய ஜநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 109. இப்பொழுது அவருடைய பிதா யார்? பாருங்கள், நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? கவனியுங்கள். அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியா யிருக்கிறது... [சபையோர், "பரிசுத்த ஆவியினால் உண்டானது" என்கின்றனர்.] 110. "பிதாவாகிய தேவன் அவருடைய பிதாவாயிருந்தார்" என்று அவர்கள் கூறினர் என்று நான் நினைத்தேன். ஓ, வேத சாஸ்திரிகளே, உங்களுடைய புரிந்துகொள்ளுதல் எங்கே? கவனியுங்கள், "சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்!" 111. உண்மையான வித்து மரியாளிடத்திலிருந்து தோன்றினது, ஆனால் அது அவளுடைய வித்து அல்ல. அது தேவனுடைய வாக்குத்தத்தமாயிருந்தது, அவள், "இதோ ஆண்டவருக்கு அடிமை" என்று கூறினாள். ஜீவனை சுமப்பவர்கள் ஸ்திரீகளாயிருந்தனர். இப்பொழுது, மரியாளே, வித்து மிக அருகாமையில் உள்ளது. 112. ஆகார் அதை ஒரு தாறுமாறான வழியில் பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. சாராள் அந்தக் காரியத்தை சந்தேகித்து, அதை ஒரு மாம்சப்பிரகாரமான சந்ததிக்கு, பாலியல் இச்சைக்கு கொண்டு வந்தாள். ஆனால் மரியாளோ, எந்தவித பாலுணர்வுமின்றி, வார்த்தையை விசுவாசித்தாள், அந்த வார்த்தை மாம்சமானாது. 113. ஆனால் கவனியுங்கள், மரியாள் மிக அருகாமையில் இருந்ததால், அவள் அந்த வித்தை தன்னுடைய கர்ப்பத்தில் வைத்திருந்தாள், அது அவளுடைய வித்தாயிருக்கும் என்பது போன்று காணப்பட்டது. பெந்தேகோஸ்தேயினரும் அவ்வாறேயுள்ளனர். நான் இக்காலத்திற்கு வரப்போகிறேன். ஆனால் நினைவிருக்கட்டும், இயேசு மத்தேயு 24-ம் அதிகாரம் 24-ம் வசனத்தில், "கடைசி நாட்களில், இரண்டு ஆவிகள்..." என்றார். இப்பொழுது, ஆரம்ப நாட்களில் அல்ல. "பிந்தைய காலங்களில் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்குமளவிற்கு இரண்டு ஆவிகளும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக இருக்கும்." பெந்தேகோஸ்தே ஆவி, உண்மையான காரியத்தைப் போலவே, கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் அது வஞ்சிக்கும்படி மிகவும் பரிபூரணமாயுள்ளது. 114. இப்பொழுது, அது என்னுடைய வார்த்தைகள் அல்ல. அதைத்தான் அவர் கூறினார். இப்பொழுது, சற்று கழித்து, நான் கூற முயற்சிப்பதைக் குறித்து நீங்கள் ஒரு வேளை புரிந்து கொள்வீர்கள். இப்பொழுது அந்த வித்து நிச்சயமாகவே அதிகமாக காணப்பட்டது... 115. மகரந்தப் பொடி செய்ததைக் காட்டிலும் அதிகமாக, தண்டு செய்ததைப் பார்க்கிலும் அதிகமாக, காணப்படுமளவிற்கு அந்த பதர் வித்தை போன்றே காணப்பட்டது, ஆனால் அவர்கள் வித்தை சுமப்பவர்களாக மாத்திரமே இருந்தனர். பாருங்கள், லூத்தர் ஸ்தாபனமாக்கினார், தண்டு மரித்தது; வெஸ்லி ஸ்தாபனமாக்கினார், மகரந்த பொடி மரித்தது; பெந்தேகோஸ்தே ஸ்தாபனமானபோது, ஜீவன் மரித்துப்போனது. இப்பொழுது வித்து தோன்றுகின்றது. நீங்கள் வித்திற்கு மேல் செல்ல முடியாது. 116. கவனியுங்கள், வருடங்கள் முழுவதிலும் ஒரு பெரிய அசைவு எழும்பும்போது, அதற்குப் பின்னால் உடனடியாக ஒரு ஸ்தாபனம் வருகிறது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் வரைக்குமே எழுப்புதல் நீடித்திருக்கும், அதன்பின்னர் அவர்கள் அதை ஸ்தாபித்து, ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்குகின்றனர். அதிலிருந்து அநேகர் வெளியே வந்திருக்க வேண்டும்; லூத்தரின் காலத்திலிருந்து அநேகர் வெளியே வந்திருக்க வேண்டும், கதிர்கள்; மகரந்தப் பொடியிலிருந்து அநேகர் வெளியே வந்திருக்க வேண்டும், வெஸ்லி; பெந்தேகோஸ்தே இலைகள் வெளியே போகின்றன, ஒருத்துவம், இருத்துவம், மூன்றத்துவம், நான்கத்துவம், ஐந்தத்துவம். ஓ, இரக்கம்! பார்த்தீர்களா? 117. ஆனால், கவனியுங்கள், இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்ட இருபது ஆண்டுகளாகவே! எந்த ஒரு அமைப்பும் கிளர்ந்தெழவில்லை, எந்த ஒன்றும் கிளர்ந்தெழாது; அது பின்மாரி அசைவை போலவும், மற்ற ஒவ்வொரு காரியத்தை போலவும் மரித்துவிடும். இது கடைசி காலம், இஸ்மவேல் ஈசாக்கோடே சுதந்திரவாளியாக இருக்க முடியாதது போலவே, வித்தானது, பதரோடு சுதந்தரவாளியாய் இருக்காது. 118. இப்பொழுது இங்கே பாருங்கள், அவள் எவ்வளவு அருகாமையில் இருக்கிறாள், வஞ்சிக்கும் அளவுக்கு அருகாமையில் இருக்கிறாள். லூத்தர், தண்டு; வெஸ்லி, பட்டுக் குஞ்சம்; மரியாள், பதர், அல்லது கர்ப்பம் அல்லது பெந்தெகொஸ்தே. என்னால் எப்படி அந்த பதரின் பேரில் சென்று, உங்களுக்கு காண்பிக்க முடியும். காலங்கள் தோறும், இப்பொழுது உள்ளதைப் போல அது ஒருபோதும் அவ்வளவு நெருங்கியிருக்கவில்லை. எல்லாமே சபை, சபை, பாருங்கள், "அவள்". 119. கவனியுங்கள், "அவள்" தான் ஆதியில், மூல வாக்குத்தத்தத்தை சந்தேகித்தாள். அது தேவன் தம்முடைய வார்த்தையை திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை. இன்றைக்கு தேவன் தம்முடைய வார்த்தையை திரும்ப எடுத்துக் கொண்டிருக்கவில்லை; அவர் தம்முடைய மூல வார்த்தையை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்! ஆனால் சாராளோ, "ஒருவேளை, சந்தேகித்திருக்கலாம்; நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றாள். 120. இன்றைக்கு ஜனங்களோடுள்ள காரியமும் அதுதான், நீங்கள் எதற்குள்ளாக ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறியாத ஒன்றிற்குள்ளாக நீங்கள் ஏற முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருந்தாலொழிய நீங்கள் அதை எப்படி செய்யப் போகிறீர்கள்? நீங்கள் கண்களைக் கட்டிக்கொண்டு நடக்கிறீர்களா? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறியாத ஏதோ ஒரு காரியத்திற்குள் ஏற முயற்சித்தால், நீங்கள் விழுந்து போவீர்கள். "குருடனுக்கு குருடன் வழிகாட்டினால், அவர்கள் இருவரும் குழியிலே விழுவார்கள்" என்று இயேசு அந்த மேற்கோளைக் கூறினார். 121. ஆனால் இப்பொழுது நாம் வித்தின் நேரத்தில் நின்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது வித்து பிடித்துக் கொள்ளும், (என்ன?) அதை ஆதரிக்கும், வித்து அதைப் பற்றிக்கொள்ளுதலோடு ஒத்துழைக்கும். அதைப் பற்றிக்கொள்ள, அந்த நோக்கத்திற்காகவே அது அங்கு அமைக்கப்பட்டிருந்தது. 122. ஏனெனில், வசந்த காலத்தின் துவக்கத்தில் கோதுமையின் மேல், சூரியன் உதிக்கும்போது, முழு இயற்கையும் பருவ கால சுழற்சியினூடாகவும், நாளின் சுழற்சியினூடாகவும், ஒவ்வொரு காரியமும் தேவனோடு, பரிபூரணமாக உருண்டோடுவதைக் கவனியுங்கள். இப்பொழுது அந்த உஷ்ணமான சூரியன் வித்தின் மேல் பிரகாசிக்கத் துவங்கும்போது, அது வெளிப்படுகிறது. ஆனால் அந்த வித்தை மண்ணிலிருந்து தோன்றச் செய்ய உலகம் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்க வேண்டும். அது இந்த விதமாக சுற்றி வந்து, அந்த வித்தை தோன்றச் செய்ய ஒரு குறிப்பிட்ட நிலையை அடைய வேண்டும். இருண்ட காலத்திலிருந்து...அதை வெளியே கொண்டு வர அது அந்தவிதமாக வர வேண்டியதாயிருந்தது. 123. சில ஜனங்கள்...ஒரு அமைதியான தேவன் என்ற, புத்தகத்தை எழுதினான் என்று நான் கூறின இந்த விமர்சகன், அவன், "இருண்ட காலங்களினூடாக, அந்த பரிதாபமான இரத்த சாட்சிகள் மரித்து, அவர்கள் கீழே சென்ற, அவர்கள் கிறிஸ்தவர்கள், தேவன் கவலைப்படாதது போல பரலோகத்தில் அவர் உட்கார்ந் திருக்கிறார்," என்றான். ஏன், ஏழை எழுத்தறிவில்லாத, குருடாக்கப்பட்ட, ஆவிக்குரிய குருடாக்கப்பட்ட மனிதனின் கண்கள் மாத்திரம் திறக்கப்பட்டால் நலமாயிருக்குமே! வித்தானது மீண்டும் தோன்றுவதற்கு முன்பு, அது மண்ணிலேயே கிடந்து, மரித்து அழுகிப் போக வேண்டியதாயுள்ளது என்பதை நீங்கள் அறியவில்லையா? 124. பெந்தெகொஸ்தே சபையானது ஆதி கத்தோலிக்க சபையினூடாக மரித்துப் போனது. அவள் ஒரு தண்டு வடிவில் வந்தாள், ஆனால் அவள் லூத்தரன், வெஸ்லி, பெந்தேகோஸ்தே காலங்களினூடாக ஒவ்வொருவரோடும் எவ்வளவு நெருக்கமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறாள் என்பதை நீங்கள் பார்த்தீர்களா? உங்களுக்குப் புரிகிறதா? 125. இப்பொழுது பூமியின் மேல் அவர் கொண்டிருந்த அந்த மூல ஊழியத்திற்கு நேராக திரும்பி வர வேண்டும், ஏனென்றால் அது மணவாட்டி. அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். கடைசி நாட்களில், இந்தக் காரியங்கள் எப்படி சம்பவிக்கும் என்று, இப்போது அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். மல்கியா 4, பரிசுத்த லூக்கா 17:30 எல்லா வாக்குத்தத்தங்களையும் போலவே அவைகள் சம்பவிக்கிறதை நாம் காண்கிறோம். ஓ, இன்னும் எத்தனை வேதவாக்கியங்கள், அது முடிவற்றதாயிருக்கும்! 126. மேலும், ஓ, நான் நிறுத்த வேண்டியதாயுள்ளது, ஏனென்றால் இது காலதாமதமாகிவிட்டது. ஆம். சரி, நீங்கள்-நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள், அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தால் பாருங்கள்...நீங்கள் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், பாருங்கள், அதன்பின்னர் நீங்கள் வந்து என்னிடம் சொல்லுங்கள். இப்பொழுது, ஒரு நிமிடம். நான் இதைக் கூற விரும்புகிறேன், பாருங்கள். நீங்கள் இதை மிகவும் முக்கியமாக காண வேண்டும் என்று நான்-நான் விரும்புகிறேன். பாருங்கள், இயேசு...கவனியுங்கள், பாருங்கள், மணவாட்டி. 127. இன்னும், நாம் இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில், நாம் கண்டறிவோம், பாருங்கள், கருப்பை, பெந்தேகோஸ்தே ஸ்தாபனம், உண்மையான காரியத்தைப் போலவே காணப்பட்டது. ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரம் ரோமன் கத்தோலிக்க சபையை, முதல் ஸ்தாபனத்தை "வேசி" என்று அழைத்தது என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா? அது உண்மை என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? அவள் வேசிகளுக்குத் தாய் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒழுக்கக்கேடான ஸ்திரீ என்றால் என்ன? இப்பொழுது, இந்த ஸ்திரீ "சபை" என்று அவர் கூறினார். விபச்சாரி என்றால் என்ன? அவளுடைய விவாக உறுதிமொழிக்கு உண்மையற்ற ஒரு பெண். ஒரு வேசி என்றால் என்ன? அதே காரியம், அதே வார்த்தை. 128. இப்பொழுது, அவள் பெற்றெடுத்தாள். எப்படிப்பட்ட பிறப்பு? வார்த்தைக்கு அல்ல, ஸ்தாபன பிறப்பிற்கு. இங்கே மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தேகோஸ்துக்கள் உள்ளனர், அவர்கள் யாவரும் தங்களுடைய தாயின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொண்டனர். கலிபோர்னியாவில் எந்த நடத்தைக்கெட்ட பெண்ணும் ஒரு கன்னிப் பெண்ணைப் பெற்றெடுக்க முடியும்; அந்தக் விதமாகத்தான் முதல் செய்தி வருகிறது, ஆனால் சத்தியம் லூத்தரின் காலத்தில், பரிசுத்தமாக்கப்படுதலின் காலத்தில் அளிக்கப்பட்டபோது, அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது மெத்தோடிஸ்டுகளுக்கு அளிக்கப்பட்டு, மெத்தோடிஸ்டுகளுக்கு வழங்கப்பட்டபோது, அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பொழுது, பெந்தெகொஸ்தேயின் வித்து நேரம் தோன்றும்போது, அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, அவள் ஸ்தாபனமாக்கப்பட்டாள், ஆனால் அவள் வித்தை சுமந்து செல்லும் ஒரு தண்டாக இருந்து வருகிறாள், பாருங்கள். 129. [ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார். ஒலிநாடாவில் காலியிடம்] ஆமென். இப்பொழுது அந்த வார்த்தைக்காகவும், கூறப்பட்ட வார்த்தையின் எளிமைக்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். 130. பாருங்கள், இது மிகவும் எளிமையாக உள்ளது. தானியம் வளருவதைக் கவனிப்பது போன்றே இது உள்ளது. நீங்கள் அதைக் குறித்த ஏதோ ஒரு பெரிய வேத சாஸ்திர வியாக்கியானத்தைப் பெற்றிருக்க வேண்டியதில்லை. அதைக் கவனியுங்கள். நீங்கள்...அவர் எல்லா நேரத்திலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிறார். பாருங்கள்...அது ஒரு... 131. நான் நிறுத்த வேண்டும். நான் அந்த சிறு இழுப்பை உணர்ந்தேன், நான் அதைச் செய்யும்படி அவரிடம் கேட்டேன். நாம் முடிக்க வேண்டும். இப்பொழுது, சகோதரனே, இந்த ஒரு குறிப்பு மாத்திரம், அதன்பின்னர் நான் போய்விடுவேன். 132. பாருங்கள், இப்பொழுது, பதர், தண்டு, போன்றவை வார்த்தையைக் கொண்டு செல்பவைகள் மாத்திரமே. அவர்கள் கீழே இறங்கும் வரை, பாருங்கள், அவர்கள் வார்த்தையின் ஒரு பாகத்தை உடையவர்களாயிருந்தனர்; நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப் படுதல், பெந்தேகோஸ்தேக்களில் வரங்களின் திரும்ப அளித்தல். ஆனால் இப்பொழுது கவனியுங்கள். அது இஸ்மவேல், ஈசாக்கு, பாருங்கள், அதன்பின்னர் இயேசுவுக்கு இருந்தது போல; பாருங்கள், ஒன்று தாறுமாறாக்கப் பட்டதாயிருந்தது, மற்றொன்று அசலானதாய் இருந்தது, இங்கே அந்த வித்துதாமே வருகிறது. பார்த்தீர்களா? இப்பொழுது, சபையானது அதே காரியத்திலிருந்து திரும்பி வந்துள்ளது. ஒரு மலரைப் போல அல்லது மற்றெந்த காரியத்தையும் போல, அது குடித்து, உள்ளே இழுத்து, செல்கிறது... 133. அது லூத்தரன் இழக்கப்பட்டு விட்டது என்று அர்த்தமல்ல. பரிசுத்தமாக்கப்படுதலை நிராகரித்த லூத்தரன்கள், அந்த ஏதோ ஒரு காரியத்தை பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்...பாருங்கள், இஸ்ரவேலர் ஒவ்வொரு இரவும் புதிய மன்னாவைப் புசிக்கின்றனர், பாருங்கள். கவனியுங்கள். 134. ஆனால் இப்பொழுது கடைசி காலத்தில், இங்கே இந்த பதரைப் பாருங்கள், இப்பொழுது கவனியுங்கள், கோதுமை. ஜீவனின் முழு இரகசியமும் அந்த பதருக்குள் முத்திரையிடப்பட்டுள்ளது. நாம் அதில் லூத்தர் வருவதைக் காண்கிறோம். நாம் அது பட்டுக் குஞ்சத்தில், வெளியே வருவதைக் காண்கிறோம். நாம் அதை தண்டில் காண்கிறோம். நாம் இங்கு வருகிறோம், இப்பொழுது அது பதரின் வடிவில் உள்ளது, கிட்டத்தட்ட பெந்தேகோஸ்தே காலத்தில் இருந்ததைப் போன்றே, ஆனால் உண்மையான இரகசியம் உட்புறத்தில் மறைக்கப்பட்டுள்ளது. 135. இப்பொழுது நினைவிருக்கட்டும், வெளிப்படுத்தின விசேஷத்தின்படி, புஸ்தகத்தின் முழு இரகசியமும் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டுள்ளது, சீர்திருத்தவாதிகளுக்கு சீர்திருத்தத்தின் நான்கு நிலைகளை, உருவாக்க வாய்ப்பு இல்லை, உலகத்தின் நான்கு வல்லமைகளை சந்திக்க புறப்பட்டுச் சென்ற நான்கு ஜீவன்களின் நான்கு நிலைகள். முதலில் புறப்பட்டு சென்றது, ஒரு... 136. முதலில் புறப்பட்டுச் சென்றது யார்? ஒரு சிங்கம், ரோமானிய காலத்தை சந்திக்க வேண்டும். அதுவே மூல வார்த்தையாயிருந்தது. அவர் யூதா கோத்திரத்து சிங்கம். கிறிஸ்து தாமே அந்த காலத்தை சந்திக்கச் சென்றார். சந்திக்கச் சென்ற அடுத்த மிருகம் எது; அடுத்த மிருகம் மற்ற குதிரையின் மேல் சவாரி செய்தவனை சந்திக்கச் சென்றது, அவன் என்னவாக இருந்தான்? பாருங்கள், அந்த முதல் குதிரையின் மேல் சவாரி செய்பவன் வெள்ளை வஸ்திரம் தரித்து, தன்னுடைய தலையில் முடிசூட்டப்பட்டவனாயிருந்தான், பின்னாளில், மற்றபடி, அம்புகளேயில்லாத ஒரு வில் இருந்தது. 137. புறப்பட்டுச் சென்ற இரண்டாம் குதிரையைக் கவனியுங்கள், அதைச் சந்திக்கச் சென்ற மிருகம் ஒரு காளையாயிருந்தது. காளை பலி செலுத்தப்படும் ஒரு மிருகம். இருண்ட காலத்தில் அவர்கள் இரத்த சாட்சிகளாக கீழே சென்றனர். 138. அடுத்த குதிரையை சந்திக்கச் சென்ற மூன்றாம் மிருகம், மரண குதிரை சவாரி செய்வதற்கு முன்பு, மரணமும் நரகமும், அடுத்த குதிரை...அன்றைய குதிரையின் மேல் சவாரி செய்தவனை சந்திக்கச் சென்ற அடுத்த மிருகம் மனித முகத்தையுடைய மிருகமாயிருந்தது. எத்தனை பேருக்கு அது தெரியும்? அறிவாற்றல் கொண்ட காலம், சீர்திருத்தக்காரர்கள், லூத்தர், வெஸ்லி, கால்வின், நாக்ஸ், ஃபின்னி, மூடி. பார்த்தீர்களா? 139. ஆனால் அப்பொழுது கவனியுங்கள், சாயங்கால நேரத்தில் என்ன நடந்தது? ஒரு கழுகு, மீண்டும் தீர்க்கதரிசனமாக உள்ளது. ஏறக்குறைய கழுகின் காலத்தில் வெளிச்சம் உண்டாகும், மகிமைக்கு செல்லும் பாதையை நீங்கள் நிச்சயமாகக் கண்டடைவீர்கள், ஓ ஜீவனுள்ள தேவனுடைய சபையே! 140. நான் இங்கு வந்து, ஒரு நாள் காலை அமர்ந்து, நாள் முழுவதும் தங்கியிருந்து, இந்த காரியங்களின் பேரில் உங்களோடு ஐக்கியங்கொள்ள விரும்புகிறேன். கவனியுங்கள், நான் உங்களை நேசிக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என் சகோதரர்களே, நான் உங்களை நேசிக்கிறேன். நான்-நான்-நான் ஒவ்வொரு ஸ்தாபனத்துக்கும் சென்று ஒத்துழைக்க...மற்றும்-நான் ஒவ்வொருவரோடும் விசுவாசிக்க விரும்புகிறேன். ஆனால், நீங்கள் பாருங்கள், அது முடியாது. எனக்காக ஒரு கதவும் திறந்தே இல்லை. 141. நான் இப்பொழுது ஸ்தாபனத்தின் காரணமாக, ஒரு தேசத்திற்குள்ளாக நழுவிக்கொண்டிருக்கிறேன், ஏனென்றால் அவர்கள் தேவனுடைய ஊழியத்தை அனுமதிக்கமாட்டார்கள்...நான் அவர்களுக்கு திரும்ப ஒரு கடிதம் எழுதினேன், நான், "பத்து வருடங்களாக நான் உள்ளே வர முயற்சித்து வருகிறேன். நீங்கள் உங்களுடைய பைத்தியக்கார ஞானஸ்நானத்தினாலே!" என்று கூறினேன். 142. அவர்களில் ஒருவர் நீங்கள் மூன்று முறை ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று நம்புகிறார்: முகம் முன்நோக்கியவாறே; ஒரு விசை பிதாவுக்காகவும், ஒரு விசை குமாரனுக்காகவும், பரிசுத்த ஆவிக்காகவும். மற்றொருவன், "இல்லை, நீ மூன்று தரம் பின்னோக்கி ஞானஸ்நானம் பெற வேண்டும். ஒரு விசை குமாரனுக்காகவும், ஒரு விசை பிதாவுக்காகவும், பரிசுத்த ஆவிக்காகவும்" என்றார். அவர்கள் இருவரும் தவறாயிருக்கிறார்கள். 143. ஒருவர், "அவர், நீங்கள் அவருடைய மரணத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள், அவர் மரித்தபோது, அவர் முன்னோக்கிச் சாய்ந்தார். நாங்கள் அவருடைய மரணத்திற்கென்று ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்" என்றார். மற்றொருவர், "ஒரு மனிதனை அவனுடைய முகத்தைப் பார்த்தவாறு புதைப்பது யார்? நீங்கள் அவனை பின்னோக்கிப், புதைத்து விடுங்கள்" என்றார். இப்படிப்பட்ட முட்டாள்தனமான, ஜனங்களை வேறுபிரித்தல், அது பொறாமை என்பதையே காண்பிக்கிறது. அது சாத்தானிடத்திலிருந்து வந்தது. அது தேவனால் உண்டானதல்ல. 144. இருபக்கத்தின் மத்தியிலும், தேவன் இருபக்கத்திலும் இல்லை, ஆனால் அவர் இருபக்கத்திலிருந்தும் அழைத்துக் கொண்டிருக்கிறார், "அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போங்கள், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக் கொள்வேன் என்று தேவன் சொல்லுகிறார்." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 2 THE SEED SHALL NOT BE HEIR WITH THE SHUCK வித்து பதருடன் சுதந்தரவாளியாயிருக்காது 2